ரன்பீர் கபூர் , ராஷ்மிகா நடித்திருக்கும் அனிமல் படத்தின் ட்ரெய்லர் ரகிகர்களைக் கவர்ந்துள்ளது. தந்தை மகனுக்கு இடையிலான சிக்கலான உறவை மையப்படுத்தி அனிமல் படம் எடுக்கப் பட்டிருக்கிறது. தந்தைக்கும் மகனுக்கும் இடையிலான உறவுச் சிக்கல் என்பது தென் இந்திய சினிமாக்களில் குறிப்பாக தெலுங்கு சினிமாக்களில் அதிக பேசப்படும் ஒரு கதைக்களம். இதனை மையப்படுத்தி வெளியான ஐந்து படங்களைப் பார்க்கலாம்.



மிஸ்டர் பாரத்

ரஜினிகாந்த் சத்யராஜ் ஆகிய இருவரும் இணைந்து நடித்த திரைப்படம் மிஸ்டர் பாரத். தன்னுடைய அம்மாவை காதலித்து ஏமாற்றிய தந்தையை பழிவாங்கும் நோக்கத்தில் அவருக்கு பிஸ்னஸ் போட்டியாக மாறுகிறார் பாரத்.

தேவர் மகன்


கமல்ஹாசன் சிவாஜி கணேசன் நடித்த தேவர் மகன் திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் அடிப்படையில் இது ஒரு தந்தைக்கும் மகனுக்குமான படம். நகரத்திற்கு சென்று படித்துவிட்டு வரும் மகன் தன்னுடைய தந்தையின் பழமைவாத எண்ணங்களையும் வாழ்க்கை முறையுடனும் முரண்படுகிறான். தனக்கென்று தனி கனவுகள் இருந்தும் தான் வெறுக்கும் இந்த சூழலுக்குள் எப்படி மாட்டிக்கொள்கிறார் என்பது தேவர் மகன் படத்தின் கதை.

தவமாய் தவமிருந்து



ஒரு சாதாரண தந்தை தன்னுடைய இரு மகன்களை படித்து அவர்களை நல்ல ஒரு நிலைக்கு கொண்டு வர தன் வாழ்நாளில் எதிர்கொள்ளும் சவால்களை சொல்லும் மிக எதார்த்தமான ஒரு படம் தவமாய் தவமிருந்து

சந்தோஷ் சுப்ரமணியம்

ஜெயம் ரவி , ஜெனிலியா, பிரகாஷ் ராஜ் நடித்து மோகன் ராஜா ரீமேக் செய்த படம் சந்தோஷ் சுப்ரமணியம். தன்னுடைய வாழ்க்கையின் எல்லா முடிவுகளையும் தன்னுடைய தந்தை எடுப்பதால் எரிச்சலடையும் சந்தோஷ் சொந்தமாக ஒரு தொழில் தொடங்க முயற்சி செய்கிறார். அப்படி செய்வது மட்டுமே தன் தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்து வெளிவதற்கான ஒரே வழியாக கருதுகிறார். சந்தோஷுக்கும் அவரது தந்தைக்குமான உறவில் இருக்கும் இந்த முரண்பாடு என்ன முடிவுக்கு வருகிறது என்பதே படத்தின் கதை.

கிரீடம்



தனது மகனை எப்படியாவது போலீஸ் வேலையில் சேர்த்துவிட வேண்டும் என்கிற கனவோடு இருக்கும் தந்தை. ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகள் அவரது மகனின் வாழ்க்கையை வேறு ஒரு திசையில் வழிநடத்துகின்றன. அஜித் நடித்த படங்களில் தனித்துவமான மற்றும் உணர்ச்சிவசமான ஒரு கதை கிரீடம் திரைப்படம்.



எம் மகன்


ஒரு ஸ்ட்ரிக்ட் ஆன தந்தை இருக்கும் ஒவ்வொரு வீடும் எம் மகன் படத்தை தங்களது குடும்பத்துடன் நிச்சயம் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும்.

வாரணம் ஆயிரம்

கெளதம் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, திவ்யா ஸ்பந்தனா, சிம்ரன் உள்ளிட்டவர்கள் நடித்த வாரணம் ஆயிரம் திரைப்படம் சமீபத்தில் 15 ஆம் ஆண்டை நிறைவு செய்தது சூர்யாவின் தந்தையான கிருஷ்ணனின் மரணத்தைத் தொடர்ந்து தன் வாழ்க்கையின் பல்வேறு தருணங்களில் உடனிருந்த தனது தந்தையை நினைவு கூறுகிறார். ஒரு மனிதனின் இளமை முதல் முதுமைப் பருவம் வரையிலான ஒரு வட்டத்தை ஒரு படமாக இயக்கினார் கெளதம் மேனன்.