Aagneya : மிகுந்த பொருட்செலவு.. உயர் தொழில்நுட்பம்.. பிரமாண்டமாக உருவாகும் ஆக்நேயா..!

இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆல்பியா நடித்துள்ளார்.

Continues below advertisement

கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் அசத்தல்களுடன் தமிழ் திரைப்படம் ஆக்நேயா உருவாக்கப்பட்டுள்ளது. இது விர்சுவல் ப்ரோடுக்ஷனால் உருவாக்கபடும் முதல் தமிழ் திரைப்படம் ஆகும் .

Continues below advertisement

தமிழனானேன் மற்றும் 2323 போன்ற வெற்றி படங்களை இயக்கிய சதிஷ் ராமகிருஷ்ணன் இந்த திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். "வெற்றித்தமிழ் உருவாக்கம்"  சரவணன் ராதாகிருஷ்ணன் இந்த  திரைப்படத்தை தங்கள் மூன்றாவது தயாரிப்பாக தந்துள்ளார். இந்த திரைப்படம் மிகுந்த பொருட்செலவில் ஆங்கில தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது. இது தமிழ் சினிமாவில் ஒரு மைல் கல்லாக இருக்கும்.

இயக்குநர் கூறுகையில் ஒரு காட்டின் தெய்வமான ஆராவை மாந்திரீகம் கொண்டு அடக்கி, அவள் வாழ்ந்த காட்டையும், பூர்வ மக்களையும் அழித்து விடுகிறார்கள். ஆரா மீண்டு வந்து என்ன செய்கிறாள் என்பதே கதையின் கரு என்று கூறுகிறார்.

இயக்குநர் சதிஷ் ராமகிருஷ்ணன் கதையின் நாயகனாகவும் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ஆல்பியா நடித்துள்ளார். சதிஷ் ராமகிருஷ்ணன் படத்தின் எடிட்டிங் மற்றும் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் பொறுப்பையும் தானே ஏற்றுக்கொண்டிருக்கிறார். கேமரா பொறுப்பை சரவணன் ராதாகிருஷ்ணன் அருமையாக செய்துள்ளார். சதிஷ் ராமகிருஷ்ணன் பிரபல ஹாலிவுட் அனிமேஷன் கலைஞர் சாமீ பெஸி இடம் கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் கற்றவர். திரைப்படத்தின் இசை காலேப் அமைத்துள்ளார். துணை எழுத்தாளர் மற்றும் காலை, ஆடை வடிவமைப்பு ப்ரீத்தா சரவணன் ஏற்றுள்ளார்.இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்று கூறியுள்ளார்

Continues below advertisement
Sponsored Links by Taboola