திருக்குறள் ஆன்மீக சார்ந்த நூல் இல்லை என்றும், திருக்குறள் வாழ்வியலுக்கானது என்றும் தமிழ் சினிமா பாடலாசிரியரும், கவிஞருமான வைரமுத்து தெரிவித்துள்ளார். 


தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி திருக்குறள் ஒரு ஆன்மீக நூல் என்று தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார். அதாவது திருக்குறள் வெறும் வாழ்க்கை நெறிமுறைகளை மட்டும் சொல்லும் புத்தகம் இல்லை என்றும், அதில் இருக்கும் ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்பட்டுவிட்டதாகவும் ஆளுநர் தொடர்ந்து தெரிவித்து வரும் கருத்து சர்ச்சையாகி வருகிறது. ஏற்கனவே, இரண்டு முறை திருக்குறள் பற்றி ஆளுநர் கருத்து தெரிவித்துள்ளார். 


கடந்த வெள்ளிக்கிழமை சென்னை அண்ணா பல்கலைக்கழக்கத்தில் நடைபெற்ற  ’ உலக அமைதிக்கும் மனித வாழ்விற்கும் வழி காட்டும் திருக்குறள் (Thirukkural To The Humanity For World Peace And Harmony') என்ற மாநாட்டை ஆளுநர் ஆர்.என். ரவி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், திருக்குறள் மொழிப்பெயர்ப்பட்ட போது, அதிலிருந்த ஆன்மீக கருத்துகளை ஜி.யூ. போப் மறைத்துவிட்டார் என்றும், அரசியல் காரணத்திற்காக திருக்குறளில் உள்ள ஆன்மீக கருத்துக்கள் மறைக்கப்படுவது சரியானதில்லை என்று குறிப்பிட்டு பேசியிருந்தார். 


வைரமுத்து பதில்:


ஆர்.என்.ரவியின் இந்த கருத்திற்கு வைரமுத்து டிவிட்டரில் தனது கருத்தை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதில், திருக்குறள் ஆன்மீக கருத்துக்களை கொண்டது இல்லை;  அது மனித வாழ்வியலுக்கான அறம் சார்ந்த நெறிமுறைகளை கூறுவதாகும். திருக்குறள் அனைவருக்கும் பொதுவானது. அதை ஒரு குறிப்பிட்ட கருத்துக்குள் திணிக்க நினைப்பது தவறானது என்று குறிப்பிட்டுள்ளார்.






திருக்குறள் வாழ்வியல் புத்தகம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.