Amala Paul: ஹாப்பி நியூஸ்! ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால்! குழந்தையோட பெயர் என்ன தெரியுமா?

தமிழ் திரையுலகின் பிரபல நடிகை அமலாபாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Continues below advertisement

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் அமலா பால். மைனா படம் மூலமாக தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களில் நடித்து வந்த அமலா பால் தனது நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாயை கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து, அமலா பால் கருவுற்றார்.

Continues below advertisement

இந்த நிலையில், அமலா பாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. கடந்த 11ம் தேதி பிறந்த இந்த குழந்தைக்கு ILAI என பெயர் வைத்துள்ளதாக அமலா பாலின் கணவர் ஜெகத் தேசாய் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும், அதில் அமலா பால் குழந்தையுடன் மகிழ்ச்சியுடன் வரும் வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.

குழந்தையைப் பெற்றெடுத்துள்ள அமலா பாலுக்கும், தந்தையாகியுள்ள ஜெகத் தேசாய்க்கும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகை:

அமலாபால் 2009ம் ஆண்டு நீலத்தாமரா என்ற மலையாள படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார். பின்னர், வீரசேகரன் என்ற படம் மூலமாக தமிழில் நாயகியாக அறிமுகமானார். இந்த படத்திற்கு பிறகு சிந்து சமவெளி படத்தில் நடித்தார். உறவுச்சிக்கலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த அந்த படம் மூலம் அவர் தமிழில் ஓரளவு பிரபலமானார்.

அதன்பின்பு, பிரபு சாலமன் இயக்கிய மைனா படம் அமலாபாலுக்கு மிகப்பெரிய செல்வாக்கை தமிழில் பெற்றுத்தந்தது. அடுத்தடுத்து, தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான விக்ரமுடன் தெய்வத் திருமகள், ஆர்யாவுடன் வேட்டை, சித்தார்த்துடன் காதலில் சொதப்புவது எப்படி? அதர்வாவுடன் முப்பொழுதும் உன் கற்பனைகள், விஜய்யுடன் தலைவா, ஜெயம் ரவியுடன் நிமிர்ந்து நில், தனுஷூடன் வேலையில்லா பட்டதாரி என்று பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

நடிப்பிலும் பிசி:

தெய்வ திருமகள் படப்பிடிப்பின்போது ஏ.எல். விஜய்யுடன் ஏற்பட்ட பழக்கத்திற்கு பிறகு அவரை 2014ம் ஆண்டு திருமணம் செய்தார். ஆனால், அவர்களுடனான கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார்.

பின்னர், நாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் ஆடை, கடாவர் போன்ற படங்களில் நடித்தார். ஆனால், படங்கள் பெரியளவு வெற்றி பெறவில்லை. வெலல் கிராஸ், ட்வைஜா ஆகிய மலையாள படங்களில் தற்போது நடித்து வருகிறார். மைனா படத்திற்கு தமிழ்நாடு அரசின் சிறந்த நடிகை விருதை அமலா பால் வென்றுள்ளார்.

மேலும் படிக்க: Weapon Movie : 2 கோடி நஷ்ட ஈடு...யூடியுப் சேனலுக்கு நோட்டீஸ் அனுப்பிய வெப்பன் படக்குழு

மேலும் படிக்க: Bobby Simha: ஒரு ஆண் எதிர்பார்க்கக்கூடிய சிறந்த பெண்.. காதல் மனைவி ரேஷ்மி பற்றி பாபி சிம்ஹா நெகிழ்ச்சி!

Continues below advertisement
Sponsored Links by Taboola