தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான கதாபாத்திரங்களாக தேர்வு செய்து அதில் தன்னுடைய மொத்த திறமையையும் வெளிப்படுத்த கூடிய வெர்சட்டைலான நடிகர்களில் ஒருவர் பாபி சிம்ஹா. காதலில் சொதப்புவது எப்படி, பீட்சா உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பரிச்சயமானவர். அதைத் தொடர்ந்து சூது கவ்வும், நேரம், சாமி, பேட்ட, உறுமீன், புத்தம் புது காலை, பெங்களுரு நாட்கள், திருட்டு பயலே 2 , கோ 2 உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.


தேசிய விருது வென்ற நடிகர்


கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா படத்துக்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றார். அப்படம் அவருக்கு நல்ல ஒரு பிரபலத்தை பெற்றுக் கொடுத்தது. தற்போது ஷங்கரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 படத்தில் நடித்துள்ளார். விரைவில் அப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. 


 



காதல் மனைவி


திரை வாழ்க்கையில் ஜொலிக்கும் நடிகர் பாபி சிம்ஹா, 2016aஅம் ஆண்டு நடிகை ரேஷ்மியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள்  இருவரும் இணைந்து 'உறுமீன்' படத்தில் நடித்திருந்தனர். இந்தத் தம்பதியினருக்கு அழகான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ரேஷ்மி மற்றும் பாபி சிம்ஹா அடிக்கடி குடும்பத்துடன், குழந்தைகளுடன் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து லைக்ஸ்களை அள்ளி விடுவார்கள்.


அந்த வகையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் அன்பு மனைவி ரேஷ்மிக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான புகைப்படத்தைப் பகிர்ந்து காதலுடன் குறிப்பு ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.  "நான் உன்னை சந்தித்த நாள் முதல் இப்போது வரை, நீ எப்போதும் ஒரு ஆண் எதிர்பார்க்கக்கூடிய சிறந்த பெண்ணாக இருக்கிறாய்! எல்லா ஏற்றத் தாழ்வுகளிலும், நீ என் பக்கத்தில் இருப்பது எப்போதும் என்னை பலப்படுத்தியுள்ளது. நீ எனக்கு ஒரு சிறந்த மனைவி மட்டுமல்ல, என்னுடைய  குழந்தைகளுக்கு சிறந்த தாயும் கூட.


இன்னும் பல ஆண்டுகள் ஒன்றாக மகிழ்ச்சியும் சிரிப்பும் இருப்போம். என் முழு இதயத்துடன் உன்னை விரும்புகிறேன். ஹேப்பி பர்த்டே ரேஷ்மி" என பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் நடிகர் பாபி சிம்ஹா. 


 






அவரின் இந்த போஸ்ட் மூலம் ரசிகர்கள் பலரும் ரேஷ்மிக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தும் லைக்ஸ்களை கொடுத்ததும் வருகிறார்கள்.