பிரபல இயக்குனரான சீனு ராமசாமி தனது மனைவியுடனான 17 ஆண்டு திருமண வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதாக அறிவித்துள்ளது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.
இயக்குனர் சீனு ராமசாமி:
தமிழ் சினிமாவில் மக்களின் வாழ்வியலை தனது தேர்ந்த திரைக்கதையால் மக்களிடம் தத்ரூபமாக கொண்டு செல்லக்கூடியவர் தான் இயக்குனர் சீனுராமசாமி. இதற்காகவே இவரது இரண்டாம் படமான தென் மேற்கு பருவக்காற்று படத்திற்கு தேசிய விருது கிடைத்த்து. இது மட்டுமில்லாமல் மாமனிதன், தர்மதுரை போன்ற மக்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் தரமான படங்களை தந்திருக்கிறார்.
இதையும் படிங்க: Nayanthara : தனுஷா இப்படி பண்ணது ? புட்டு புட்டு வைக்கும் நயன்தாரா
முடிவுக்கு வந்த 17 ஆண்டு திருமண பந்தம்:
இந்த நிலையில் தான் இயக்குனர் சீனு ராமசாமி தனது மனைவியுடன் விவாகரத்து செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்து த்னது எக்ஸ் அவர் தெரிவித்துள்ள செய்தியில்,அன்பானவர்களுக்கு வணக்கம் நானும் எனது மனைவி G S தர்ஷனாவும் எங்கள் 17 வருட திருமண வாழ்வில் இருந்து விடைபெறுகிறோம்.
இருவரும் விருப்ப விவாகரத்து பெற்று அவர் அவருக்கு உண்டான திசையில் பயணிக்கவும் அந்த பாதையில் தர்ஷனாவின் செயல்பாடுகள் என்னையும் எனது செயல்பாடுகள் அவரையும் எவ்விதத்திலும் சேராது, பொறுப்பாகாது என்பதை நான் அறிவேன்.அவரும் அறிவார்.
முடிவுக்கு மதிப்பு கொடுங்கள்:
இப்பிரிவுக்கு உதவும் படி சென்னை உயர்நீதி மன்றத்தை நாடியுள்ளோம்.இருவரின் தனிப்பட்ட இந்த முடிவுக்கும் அதன் உரிமைக்கு மதிப்பளிக்கும் தங்களின் வாழ்த்துக்கள் எங்களுக்கு ஊக்கம். அன்புடன் சீனு ராமசாமி. இவ்வாறு அந்த பதிவில் இயக்குனர் சீனுராமசாமி அப்பதிவில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தொடரும் விவாகரத்துகள்:
இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகர்கள் ஜெயம் ரவி-ஆர்த்தி, தனுஷ்-ஐஸ்வர்யா, இசையமைப்பாளர்கள் ஜி.வி பிரகாஷ் சைந்தவி, ஏ.ஆர் ரஹ்மான் - சயிரா பானு என அடுத்தடுத்து திரைதுறையினர் விவாகரத்தை அறிவித்த நிலையில் அந்த வரிசை இயக்குனர் சீனு ராமசாமி இணைந்துள்ளது அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளது.