தனுஷ் நயன்தாரா சர்ச்சை


நடிகை நயன்தாரா தனுஷ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்து சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார். நானும் ரவுடி தான் படத்தின் படப்பிடிப்பு காட்சிகளை பயன்படுத்த என்.ஓ.சி கேட்டும் தனுஷ் பதிலளிக்காததால் இந்த அறிக்கையை அவர் வெளியிட்டார். மேலும் இன்னொருவர் துன்பத்தில் இன்பம் காண்பவர் என்று தனுஷை அவர் விமர்சித்தார்.தொடர்ந்து  நயன்தாரா பற்றிய ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் படப்பிடிப்பு காட்சிகள் பயன்படுத்தி இருந்ததால் தனுஷ் நயன்தாரா விக்னேஷ் சிவன் ஆகிய இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பினார். இந்த சர்ச்சையில் ரசிகர்கள் இரண்டாக பிரிந்து சோசியல் மீடியாவில் மோதினார்கள். நயன்தாரா விக்னேஷ் சிவன் மீது பல்வேறு எதிர் குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டன. பப்ளிசிக்காக நயன்தாராவை விமர்சித்தனர். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் நயன்தாரா தன் மீதான விமர்சனங்களுக்கு பதிலளித்துள்ளார். தனுஷ் உடனான சர்ச்சை பற்றியும் அவர் விளக்கமாக பேசியுள்ளார். 


ஒரு ஃபோன் கால் கூட பேசல


" நான் சரியென்று நினைக்கும் ஒன்றை செய்வதற்கு ஏன் பயப்பட வேண்டும். பப்ளிசிட்டிக்காக ஒருவரின் இமேஜை நாசமாக்குவது என்னுடைய எண்ணம் இல்லை. எங்களுக்கு தெரிந்த நண்பர்களை வைத்து தனுஷூடன் பல முறை பேச முயற்சி செய்தோம் ஆனால் எதுவுமே பயனில்லை. விக்னேஷ் அந்த படத்தில் எழுதிய நான்கு வரிகளை மட்டுமே நாங்கள் பயண்படுத்த நினைத்தோம் . அது எங்களுக்கு ரொம்ப நெருக்கமானது. இதை தனுஷிடம் சொன்னால் அவர் எனக்காக ஓக்கே சொல்லுவார் என்று நினைத்தேன். நானும் தனுஷும் பிறப்பிலேயே எதிரிகள் இல்லை. நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். ஆனால் ஏதோ ஒரு இடத்தில் அவர் எங்களிடம் இருந்து விலகிக் கொண்டார். அவருக்கு அவர் காரணங்கள் இருக்கலாம். எனக்கு என் காரணங்கள் இருக்கலாம். ஒரு கட்டத்திற்கு மேல் நான் தனுஷின் மேனேஜருக்கு ஃபோன் செய்து உங்களுக்கு அனுமதி கொடுக்க விருப்பமில்லை என்றால் கூட பரவாயில்லை ஆனால் ஒரே ஒரு முறை தனுஷை ஃபோனில் பேசச் சொல்லுங்கள் என்று கேட்டேன். என்னை பிரச்சனை , ஏன் எங்கள் மேல் கோபமாக இருக்கிறீர்களா , யாராவது எங்களைப் பற்றி தப்பாக சொல்லுகிறார்களா என்று பேசலான் என்று நினைத்தேன். ஆனால் அவர் பேசவில்லை. இத்தனை பேரால் ரசிக்கப்படக்கூடிய ஒரு நபர் தனுஷ். நாங்களும் அவரை அப்படிதான் மதித்தோம். ஆனால் இந்த மாதிரி அவர் நடந்துகொண்ட போது நான் பேசவேண்டியதாக இருந்தது" என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.