33 Years of Inaindha Kaigal: மாஸ் இன்டர்வெல் காட்சி .. தமிழ் சினிமாவில் புரட்சி பண்ணிய ‘இணைந்த கைகள்’..33 ஆண்டுகள் நிறைவு..!

தமிழ் சினிமாவில் 90களின் காலகட்டத்தில் புரட்சி பண்ணிய படங்களில் ஒன்றான இணைந்த கைகள் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதுகுறித்த சிறப்பு பதிவு ஒன்றை காணலாம். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் 90-களின் காலகட்டத்தில் புரட்சி பண்ணிய படங்களில் ஒன்றான இணைந்த கைகள் 33 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. அதுகுறித்த சிறப்பு பதிவு ஒன்றை காணலாம். 

Continues below advertisement

சாதித்த திரைப்படக் கல்லூரி மாணவர்

திரைப்படக் கல்லூரி மாணவர்களால்  கமர்சியல் சினிமாவை எடுத்து சாதிக்க முடியாது என்ற கூற்றை முழுமையாக உடைத்தவர் ஆபாவாணன். தங்களாலும் வணிக ரீதியிலான வெற்றி படங்களை கொடுக்க முடியும் என நிரூபித்து காட்டினார். அவரைத் தொடர்ந்து திரைப்படக் கல்லூரி மாணவர்களாக இருந்த பலரும் இன்றைக்கும் பல துறைகளில் தங்கள் திறமைகளை நிரூபித்து வருகின்றனர். 

அப்படிப்பட்ட ஆபாவாணன் ஊமை விழிகள், உழவன் மகன், செந்தூரப்பூவே என வரிசையாக ஹிட் கொடுத்தார். இதற்கு முழு காரணம் விஜயகாந்த் தான். நம்பிக்கை வைத்து அவர் கொடுத்த ஊக்கத்தால் தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குநர்களில் ஒருவரானார் ‘ஆபாவாணன்’. அவர் 1990 ஆம் ஆண்டில் வளர்ந்து கொண்டிருந்த ராம்கி, அருண்பாண்டியன் இருவரையும் ஹீரோக்களாக்கி ‘இணைந்த கைகள்’ என்ற படத்தை இயக்கினார். மெகா பட்ஜெட்டில் உருவான இந்த படத்தை இப்போது பார்த்தாலும் புல்லரித்து விடும். 

ஆஸ்கர் வென்றதன் மூலம் உலகளவில் பிரபலமான ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர். படத்தில் ஒரு காட்சி இடம் பெற்றிருக்கும். அதாவது பாலம் ஒன்றில் ஒருமுனையில் ஹீரோக்கள் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் கயிற்றில் தொங்கியபடி கைகளை பிடித்திருக்கும் காட்சி இடம் பெற்றிருக்கும். இதனைப் பார்த்த தமிழ் சினிமா ரசிகர்கள் இது ‘இணைந்த கைகள்’ படத்தில் வருவது தானே என சிலாகித்தார்கள். 

இணைந்த கைகள் படத்தில் அருண்பாண்டியன், ராம்கி, நிரோஷா, நாசர், ஸ்ரீவித்யா, பிரபாகரன், சிந்து, செந்தில் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். கியான் வர்மா இப்படத்திற்கு இசையமைத்தார். 

படத்தின் கதை 

பாகிஸ்தான் எல்லைக்குள் சென்றதால் கைது செய்யப்படுகிறார் பிரபாகரன். அவரது தாயான, ராணுவ மருத்துவர் ஸ்ரீவித்யா வீண் பழி சுமத்தப்பட்டு வீட்டுச் சிறையில் இருக்கிறார். இப்படியான நிலையில் தன் மகனை மீட்க,  மேஜர் அருண்பாண்டியன் உதவியை நாடுகிறார். இந்த பக்கம் வில்லன் நாசர், பிரபாகரனை கொலை செய்ய கிரிமினலான ராம்கியை அனுப்புகிறார். இவர்கள் இருவரில் பெற்றி பெற்றது யார் என்பது இப்படத்தின் கதை. 

இந்த படத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜூடோ ரத்தினத்தின் சண்டை காட்சிகள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. குறுப்பாக நதிப்பாலம், கூடைப்பந்து மைதானம், ரயில் நிலைய காட்சி என அனைத்தும் பாராட்டைப் பெற்றது. 

அதேபோல் அந்தி நேரத் தென்றல் காற்று, மலையோரம் குயில் கூவ கேட்டேன் உள்ளிட்ட பாடல்களும் இன்று ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. படத்தின் டைட்டிலைப் போலவே இந்த படம் இந்த படம் என்றும் ரசிகர்களின் மனதில் இணைந்திருக்கும் என்பதே உண்மை. 

Continues below advertisement
Sponsored Links by Taboola