பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற நடன நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் சந்தோஷ் என்னும் சாண்டி. அதன் பிறகு பல வெளிநாட்டு நிகழ்சிகளில் கலந்துகொண்டு இன்றைக்கு திரையுலகில் முக்கிய நடிகர்களின் படங்களுக்கு நனட இயக்குநராக கலக்கி வருகிறார். ஏற்கனவே நடிகை காஜல் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு , பின்னர் அவருடன் விவாகரத்தானது.  பின்னர் 2017-ஆம் ஆண்டு சில்வியா என்பவரை திருமணம் செய்துகொண்டார். கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான பிக்பாஸ் நிகழ்ச்சி மக்கள் மத்தியில் இவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. குறிப்பாக இவர் மனைவி மற்றும் குழந்தையுடன் பிக்பாஸ் ஹவுஸில் செலவிட்ட நேரங்கள் இணையத்தில் வைரலாகின. மகள் லாலாவுக்கும் இவருக்குமான பிணைப்பை ரசிகர்கள் கொண்டாடினர். தற்போது சாண்டியின் மனைவி சில்வியா இரண்டாவது முறையாக கருவுற்றிருக்கிறார். அவரது வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.







வளைகாப்பு புகைப்படத்தில் சாண்டி மாஸ்டர், அவரது மனைவி சில்வியா மற்றும் மகள் லாலா ஆகியோர் சிகப்பு நிற உடையணிந்துள்ளனர். நெருங்கிய  உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த கொண்டாட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர். கலா மாஸ்டர், தர்ஷன் உள்ளிட்ட பிரபலங்களும் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த புகைப்படத்தை  சில்வியாயும், அவரது தங்கையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இது வைரலாகி வருகிறது.







முன்னதாக சாண்டி தனது மனைவி சில்வியாவின் பிறந்த நாளின்போது வெளியிட்ட புகைப்படமும் வைரலானது. அதில்  “ஹாப்பி பர்த்டே மை டியர் கண்ணம்மா!! எனக்காகவே வாழும் ஒரு உயிர்! என்னோட வெற்றிக்காகவே உழைக்கும் ஒரு உயிர்! உன்னாலே நான், உனக்காகவே நான்! அன்பு அறியாத என் வாழ்வில் வந்த வானவில் நீயடி! லவ் யூ ஆல்வேஸ் கண்ணம்மா!”  என உணர்வுபூர்வமான ஒரு பதிவை வெளியிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.