குறும்படங்களை இணைத்து படமாக வெளியிடுவது அந்தாலஜி. ஓடிடி தலைதூக்கிய பிறகு அந்தாலஜி திரைப்படங்களும் அதிகம் பிரபலமடைந்து வருகின்றனர். பாவக்கதைகள், நவரசா போன்ற சில அந்தாலஜி ஏற்கெனவே வெளியாகியுள்ளன. அந்த வரிசையில் தற்போது வெளியாகி இருக்கிறது புத்தம் புது காலை விடியாதா.


5 கதைகள் கொண்ட இந்த திரைப்படத்தில் இயக்குநர்கள் பாலாஜி மோகன், ஹலிதா ஷமீம், மதுமிதா, ரிச்சர்ட் அந்தோணி, சூர்யா கிருஷ்ணா ஆகியோர் பணியாற்றி உள்ளனர். 5 கதைகள் என்பதால் இந்த அந்தாலஜியில் ஒரு நடிகர்கள் கூட்டமே நடித்துள்ளது. அர்ஜுன் தாஸ்,  ஐஸ்வர்யா லக்ஷ்மி, திலீப் சுப்பராயன், கௌரி ஜி. கிஷன், ஜோஜு ஜார்ஜ், லிஜோமோல் ஜோஸ், நதியா மொய்து போன்ற பலர் நடித்துள்ளனர். இது அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது