தமிழ்நாட்டு இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள கதாநாயகிகளில் நடிகை ஓவியாவும் ஒருவர். இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் பிக்பாஸ் என்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சியின் போது இவருக்கு என்று சமூக வலைதளத்தில் ஒரு ஆர்மியே இருந்தது. அந்த அளவிற்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை தன் பக்கம் ஓவியா ஈர்த்து இருந்தார். அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் எப்போதாவது சில கருத்துகளை திடீரென பதிவிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். 


அந்தவகையில் தற்போது தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில், "மரம் நடுவோம், தண்ணீரை சேமிப்போம், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத எரிசக்தியை பயன்படுத்த வேண்டும். இயற்கை உணவுகளை முடிந்தவரை சாப்பிட வேண்டும். உள்ளூர் பொருட்களை ஆதரிக்க வேண்டும். கடைசியாக முடிந்தால் கிரிப்டோ கரன்சியை வாங்குங்கள்" எனப் பதிவிட்டுள்ளார். 


 






நடிகை ஓவியா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தப் பதிவை பதிவிட்ட சில மணி நேரங்களில் 2.5 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் என்ன கிரிப்டோ கரன்சிக்கு திடீரென ஓவியா ஆதரவு தெரிவித்துள்ளார் என்ற கேள்வியை எழுப்பியும் வருகின்றனர். அத்துடன் சிலர் எந்த கிரிப்டோ காயின் வாங்க வேண்டும் என்ற கேள்வியையும் அவரிடம் எழுப்பி வருகின்றனர். 


 






 






 






இவ்வாறு பலரும் தங்களுடைய கருத்துகளை பதிவிட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: நெட்ஃபிளிக்ஸில் தோன்றுகிறார் உள்ளூர் சூப்பர் ஹீரோ ‘மின்னல் முரளி’!