விஜய் டிவியின் ராஜா ராணி சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. இவர் அந்த சீரியலில் தன்னுடன் நடித்த சஞ்சீவ் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துகொண்டார். இதற்கிடையே திருமணமான ஒருவருடத்தில் அவர்களுக்கு அய்லா என்கிற பெண் குழந்தையும் பிறந்தது. இதையடுத்து ராஜா ராணி சீசன் 2-இலும் நடித்து வரும் ஆல்யா தான் மீண்டும் இரண்டாவதாக கருவுற்று இருப்பதை அண்மையில் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பகிர்ந்தார்.
இதையடுத்து அவரது ரசிகர்கள் இரண்டாவது குழந்தை காரணமாக ராஜா ராணி சீரியலில் இருந்து விலகப் போகிறீர்களா எனக் கேட்டதற்கு முழுக்க மறுத்துள்ளார். மேலும் முதல் குழந்தை சீசேரியனில் பிறந்ததால் இரண்டாவது குழந்தை நார்மல் டெலிவரியாகப் பெற்றெடுக்கத் திட்டமிட்டுள்ளதாக தனது பக்கத்தில் தெரிவித்துள்ளார். சீக்கிரமே மீண்டும் எண்ட்ரி கொடுப்பேன் என்றும் சொல்லியுள்ளார்