தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி. இவர் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார். மக்கள் செல்வன் என்று அனைவராலும் அழைக்கப்படும் இவர் தற்பொழுது குக்கிங் ஷோ ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார் .





நடிகர் விஜய் சேதுபதி விரைவில் புதிய அவதாரத்தை எடுக்கவுள்ளார்; பிரபலமான மாஸ்டர் செஃப் தொடரை தொகுத்து வழங்க உள்ளார் . இந்நிகழ்ச்சி மாஸ்டர் செஃப்  தமிழ் என்ற பெயரில் சன் டிவியில் விரைவில் ஒளிபரப்பப்படும் என்று தெரியவந்துள்ளது .மாஸ்டர்செப்பை தமிழில் தொகுத்து வழங்குவதற்காக நடிகர் விஜய்சேதுபதி தற்பொழுது சன் நிறுவனத்துடன் இணைந்துள்ளார். இதனுடைய புரொமோ சிறிது நாட்களுக்கு முன்பு வெளியானது .



 





மாஸ்டர்செஃப்  என்பது ஃபிராங்க் ரோடாம் உருவாக்கிய பிரபலமான  சமையல் போட்டி  நிகழ்ச்சி வடிவமாகும். பின்னர் இது ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது . இது இப்போது 40 க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடங்கப்பட்டு ,  200 க்கும் மேற்பட்ட நாடுகளில் ஒளிபரப்பாகிறது.


விஜய் சேதுபதி இதற்கு  முன்பு சன் டிவியில் நம்ம ஊரு ஹீரோவை தொகுத்து வழங்கியிருந்தார், இது வெற்றி பெற்றது. அவர் நடித்து வரவிருக்கும், லாபம், துக்ளக் தர்பார், யாதும்  ஊரே யாவரும் கேளிர், மாமானிதன், விடுதலை, 9 (1) (அ) என்ற மலையாளப்படம் மற்றும் மும்பைக்கர் (இந்தி) மற்றும் காது வாகுலா ரெண்டு காதல் போன்ற படங்களில் நடித்து வரும் விஜய் சேதிபதி இந்நிகழ்ச்சியில் ஒப்பந்தமாகியுள்ளார். 


 பாலிவுட் இயக்குனர் கிஷோர் பாண்டுரங் விஜய் சேதுபதி பற்றி கூறுகையில் "ஒவ்வொரு இயக்குனரும் தனது நடிகர்களில் சில வகையான குணாதிசயங்களைத் தேடுகிறார். நான் பலரை தேடிக் கொண்டிருந்த போது அப்பொழுதுதான் விஜய் சேதுபதியை கண்டேன். அவரது நடிப்பு திறன்கள், பாணி அறிக்கை மற்றும் குரல் சுறுசுறுப்பு ஆகியவை பிரமாதமானவை.  அப்போதுதான் இவர் எனது படத்தின் முன்னணி நாயகன் என்று  நான் உணர்ந்தேன். " என்று கூறியுள்ளார்