EPFனா என்ன? 



பணியாளர்களின் எதிர்காலத்தை கணக்கில்கொண்டு Employee Provident Fund Organization என்ற அமைப்பை மத்திய அரசு நிர்வகிக்கிறது.  EPFO கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் இந்த PF சிஸ்டத்தின் கீழ் வருவார்கள். ஊழியர் தன்னுடைய சம்பளத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிப்பாக கொடுக்க வேண்டும். அதேபோல நிறுவனமும் குறிப்பிட்ட தொகையை அந்த ஊழியருக்கு சேமிப்பாக அனுப்பிவிடும். சேமிப்பாக ரூ.780 பங்களிப்பு கொடுப்பது கட்டாயமாகும். 20 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனம், அடிப்படை சம்பளம் ரூ .6291க்கும் அதிகமாக பெறும் பணியாளர்களும் இந்த  EPFன் கீழ் வருவார்கள். பணியாளர்களின் Basic + Dearness Allowanceல் இருந்து  12% சேமிப்பாகவும் செல்லும். 12% ல் 3.67% ஊழியர்களின் கணக்கிற்கும், மீதமுள்ள 8.33% ஊழியர்களின் ஓய்வூதிய திட்டத்திற்கும் செல்லும். ஓய்வூதிய திட்டத்திற்கு பிடித்தம் செய்யப்படும் தொலை ஊழியர்களின் ஓய்வுக்குப் பிறகு பயன்படும்.




EPF குறித்து இன்னும் சில குறிப்புகள்:


EPF சேமிப்பில் உள்ள பணத்துக்கு அதிக அளவிலான வட்டி கொடுக்கப்படுகிறது. இதனால் லாபம் தான். ஒவ்வொரு நிதியாண்டுக்கும் எவ்வளவு வட்டி வழங்கப்படும் என அறிவிக்கப்படும். வருமான வரிச் சட்டம் பிரிவு 80c கீழ் வரிச் சலுகைகளும் உண்டு. புதிய வரிவிதிப்பு  முறையில் இது நீக்கப்பட்டுள்ளது. ஆனாலும், உங்கள் வரியைக் கணக்கிடுவதற்கு பழைய வரி முறையைத் (Old Tax Regime) தேர்ந்தெடுத்து இந்த நன்மையை  பெறலாம்.


EPF கீழ் வரும் ஊழியர்களுக்கு இலவச காப்பீடு உண்டு. ஊழியர் வைப்புத்தொகை இணைக்கப்பட்ட காப்பீட்டின் (EDLI)கீழ் ரூ.6 லட்சம் வரை  காப்பீடு கிடைக்கும்.


ஊழியர் பணிக்காலத்தில் இறந்துவிட்டார் EPFOல் குறிப்பிட்ட நாமினி அல்லது சட்டப்பூர்வ வாரிசுக்கு, ரூ. 6 லட்சம் வரை மொத்த தொகை கிடைக்கும்




UAN:



UNIVERSAL ACCOUNT NUMBER எனப்படும் UAN என்பது ஊழியர்களுக்கு முக்கியமான ஒன்று. நம்முடைய சேமிப்பு வரலாறே 12 இலக்க எண்ணான இந்த UAN தான். நாம் ஒரே நிறுவனத்தில் காலம் முழுவதும் வேலை பார்க்க வாய்ப்பில்லை. அப்படி நிறுவனங்கள் மாறினாலும் இந்த UAN மூலம் நம்முடைய சேமிப்பை தொடர்ந்துகொண்டே இருக்கலாம். நிறுவனம் உதவியுடன் UAN மூலம் நீங்கள் உங்கள் சேமிப்பை தொடர்ந்துகொள்ளலாம். அதுபோக, சேமிப்பு பாஸ் புத்தகத்தைப் பெறுவது, சேமிப்பு விவரங்களை தெரிந்துகொள்வது, பழைய கணக்கை மாற்றி இணைப்பது போன்ற பல செயல்பாடுகளுக்கு இந்த UAN மிக முக்கியம். சரி UAN எண் இருக்கிறது. மேற்கண்ட விவரங்களை எங்கே சென்று பார்ப்பது? என்று கேட்டால் அதற்கு ஒரு இணையப்பக்கம் இருக்கிறது. UAN portal லில் ஒரு கணக்கை உருவாக்கி செயல்படுத்த வேண்டும். உங்களுக்கு யூசர், பாஸ்வேர்ட் கொடுத்து நீங்கள் உங்கள் கணக்கில் விவரங்களை பெறலாம்





பணம் எடுப்பது எப்படி?


unifiedportal-emp.epfindia.gov.in/epfo/ என்ற இணையத்தில் சென்று UAN கொடுத்து Login செய்யவும். பின்னர் Claim என்பதை கிளிக் செய்யவும். அதில் online services என்ற ஆப்சனை க்ளிக் செய்து தனிப்பட்ட விவரங்களை பதிவிடவும்.


அடுத்து process for online claim என்பதை க்ளிக் செய்யவும். அதில் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர், பான் எண், ஆதார் எண், நிறுவனத்தில் சேர்ந்த தேதி மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இருக்கும். அவற்றை சரி பார்த்தபின் Online Claim Proceed என்பதை செலக்ட் செய்ய வேண்டும். பின்னர், அதன் கீழே உள்ள மெனுவில் உள்ள  PF ADVANCE (FORM 31) ஐ தேர்ந்தெடுத்து, பணம் எடுப்பதற்காக காரணத்தை குறிப்பிட வேண்டும். பின்பு உங்களுக்கு தேவையான தொகை மற்றும் உங்கள் தற்போதைய முகவரியை நிரப்பவும். அதன் பிறகு Get Aadhaar OTP என்பதைக்  க்ளிக் செய்யவும்


பின்னர் OTP ஐ குறிப்பிட்டு Validate OTP and Submit Claim Form என்பதைக் க்ளிக் செய்ய வேண்டும். இதன் பின்பு உங்களுக்கு உங்களது EPF தொகை வழங்கும் செயல்முறை தொடங்கும்.




UMANG App பயன்படுத்தியும் EPF கணக்கில் இருந்து எளிதாக பணத்தை எடுத்துக் கொள்ளலாம். அதில் EPFO ஆப்ஷனை கண்டறிய வேண்டும். 
அதில் Employee Centric services என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, Raise Claim என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது EPF UAN Numberஐ பதிவிட வேண்டும். அதன் பிறகு உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Password-ஐ பதிவிட்டு, பணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து Submit கொடுக்க வேண்டும். பின்னர் Claim reference number அனுப்பப்படும். அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்துகொள்ளலாம்.  ஆனாலும் இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். UAN Number, UMANG App, மொபைல் எண் ஆகியவையும் ஆதாருடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.