கடந்த ஜூலை மாதம் நடிகர் சித்தார்த்(Actor Siddharth) இறந்துவிட்டதாக யூ-டியூப் வீடியோ முகப்பு படத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது சர்ச்சையை கிளப்பியது. ரசிகர் ஒருவர் இதுபற்றி நடிகர் சித்தார்த்திடமே கேள்வி கேட்டார். அதற்கு தனது ட்வீட்டில் "இந்த வீடியோ குறித்து நான் யூடியூப் சேனலுக்கு ரிப்போர்ட் செய்தேன். அதற்கு அவர் மன்னித்துவிடுங்கள். ஆனால் வீடியோவில் எந்தவிதமான தவறும் இல்லை என தெரிவித்தனர். அடப்பாவி என்று நினைத்துக்கொண்டேன்" என சித்தார்த் தெரிவித்திருந்தார்.
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்த் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலில் சிக்கிக்கொள்கிறார். அதனால் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
வியாழக்கிழமை காலை இறந்த சித்தார்த் சுக்லாவின் செய்திக்கு பிறகு சமூக ஊடகங்கள் அதிர்ச்சியூட்டும் செய்திகள் மற்றும் இரங்கல்களால் நிரம்பியுள்ளன. ஒரு சில சமூக வலைதள பயனர்கள் சித்தார்த் சுக்லாவுக்கு பதிலாக தமிழ் நடிகர் சித்தார்த் படைத்தை இட்டு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குழப்பமடைந்து அவரது படங்களை இரங்கல் குறிப்புடன் பகிர்ந்து கொண்டனர்.
நடிகர் சித்தார்த் ஷுக்லா பிக் பாஸ் 13ல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து டைட்டில் ஜெயித்தவர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். சமீபத்தில் சித்தார்த் ஷுக்லா பிக் பாஸ் OTT ஷோவில் பங்கேற்ற நிலையில் தற்போது திடீர் மரணம் அடைந்து இருப்பது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. Dance Deewane 3 என்ற ஷோவில் அவரது காதலி ஷெனாஸ் கில் உடன் சேர்ந்து பங்கேற்று இருந்தார். 1980 டிசம்பர் 12ம் தேதி பிறந்த சித்தார்த் ஷுக்லாவுக்கு தற்போது 40 வயது மட்டுமே ஆகிறது. இந்த வயதில் அவரது மரணம் பாலிவுட் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. Balika Vadhu, Dil Se Dil Tak உள்ளிட்ட பல பாப்புலர் சீரியல்களில் அவர் நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் சினிமாவிலும் சில படங்களில் அவர் தோன்றி இருக்கிறார்.
பாலிவுட் நட்சத்திரங்கள் பலரும் சித்தார்த் ஷுக்லாவின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வந்தனர். அது மட்டுமின்றி சில ரசிகர்களும் அவருக்கு இரங்கல் தெரிவித்த நிலையில், ஒரு சிலர் சமூக வலைத்தளங்களில் சித்தார்த் சுக்லாவுடன் தமிழ் நடிகர் சித்தார்தை குழப்பிக்கொண்டு, அவரது படங்களை இரங்கல் குறிப்புடன் பகிர்ந்து கொண்டிருந்தனர். அதற்கு பதிலளித்த சித்தார்த், நான் 'வார்தைகள் அற்றுப்போனேன்' என்று ட்வீட் செய்துள்ளார். இது ஆச்சர்யமாளிக்கவில்லை, நிறைய நடந்துவிட்டது, குறிவைத்து வேண்டுமென்றே வெறுப்பை கக்குகிறார்கள் என்று விமர்சித்திருந்தார். சிலரோ இது தவறுதலாக நடத்திருக்கும் என தெரிவித்து வருகின்றனர்.