KPY Bala: இல்லாதவர்களுக்கு உதவும் பாலா.. அவரின் வாழ்வை மாற்றிய தருணம் எது தெரியுமா?

ஒரு வாரம் ஊடகத்தில் வாய்ப்பு தேடுவோம். கிடைக்கவில்லை என்றால் திரும்ப படிக்க வந்துவிடுவோம் என நினைத்தேன். அந்த ஒரு வாரம் ஒரு மாதமாக மாறியது.

Continues below advertisement

என்னை பொறுத்தவரை எல்லாரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் வேலையாக உள்ளது  என நடிகர் KPY பாலா தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

உதவிக்கரம் நீட்டும் KPY பாலா

விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு', குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் ரசிகர்களிடம் நன்கு பிரபலமானவர் பாலா. வித்தியாசமான தலைமுடி, உடல்மொழி என ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தார். தொடர்ந்து இயலாதவர்களுக்கும், இல்லாதவர்களுக்கும் உதவும் பணியை பாலா செய்து வருகிறார். மாற்றுத்திறனாளிக்கு வீல்சேர் வாங்கி தந்தது, பெட்ரோல் போடும் பையனுக்கு புது பைக் வாங்கி தந்தது என பாலாவின் இந்த உதவிகள், அவரை கலியுக கர்ணன் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

வாழ்க்கையை மாற்றிய தருணம் 

ஒரு நேர்காணலில் பேசிய பாலா, “என்னை பொறுத்தவரை எல்லாரையும் சந்தோசப்படுத்த வேண்டும் என்பது தான் வேலையாக உள்ளது. அழுவுறது யார் வேண்டுமானாலும் செய்யாலும், சிரிக்க வைக்கிறது தான் கஷ்டம். வந்தோமா, வேலை செய்தமோ, காமெடி பண்ணோமா, காசை வாங்குனோமா என்பது தான் பாலாவின் ஸ்டைல்” என தெரிவித்தார். 

நான் வந்து படிக்கவில்லை. 12 ஆம் வகுப்பு வரை தான் படித்தேன். லயோலா கல்லூரியில் தான் படிப்பேன் என அடம் பிடித்தேன். வீட்டில் மிகவும் ஏழ்மை நிலை. கல்லூரி கட்டணம் ரூ.28 ஆயிரம் என்னால் கட்ட முடியவில்லை. சொந்தக்காரர்கள் தான் உதவினார்கள். நான் செகன்ட் ஷிஃப்டில் கல்லூரி போனேன். ஒருநாள் போகும்போது முதல் ஷிஃப்டில் வந்த பசங்க, பொண்ணுங்க எல்லாரையும் பார்க்கிறேன். மிகவும் வசதியாக இருக்கிறார்கள். நான் எல்லாரையும் ஜன்னல் வழியா பார்த்த அந்த நிகழ்வு தான் ஒட்டுமொத்த வாழ்க்கையும் திருப்பி போட்டது. 

நம்ம வீட்டில் வேறு கஷ்டமான சூழல் இருக்கும்போது இப்படியெல்லாம் வசதியாக வாழ முடியாது. கடன் வாங்கி தான் பீஸ் கட்டுறாங்க. அவங்க சாப்பிட்டார்களா? இல்லையா என்பது கூட தெரியவில்லை. சரி ஒரு வாரம் ஊடகத்தில் வாய்ப்பு தேடுவோம். கிடைக்கவில்லை என்றால் திரும்ப படிக்க வந்துவிடுவோம் என நினைத்தேன். அந்த ஒரு வாரம் ஒரு மாதமாக மாறியது. கிட்டதட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. நான் ஊடகத்தில் வந்து விட்டேன். 

ஒருநாள் ஒரு நிகழ்ச்சிக்கு ஆடிஷன் வரும்போது பெண் ஒருவரை சந்தித்தேன். அப்பெண் முடியை பசங்க மாதிரி வெட்டியிருப்பார். அவர் என்னிடம் வந்து, ‘என்னை சமுதாயம் ஒருமாதிரி பார்க்குது. எப்படி படிக்கணும்னே தெரியல’ என வருத்தப்பட்டார். எனக்கு பீஸ் கட்டணும், யாராவது உதவி செய்யிறவங்க இருந்தா சொல்லுங்க என சொன்னார்.நான் அப்போது 5 ஆயிரம் தான் சம்பளம் வாங்கி கொண்டிருந்தேன். கிட்டதட்ட 5,6 நிகழ்ச்சி போய் சம்பாதித்து அப்பெண்ணுக்கு பீஸ் கட்டினேன். அவரின் அம்மா என்னிடம் மகிழ்ச்சியாக பேசியது 5 ஆஸ்கர் விருது வாங்கியது மாதிரி இருந்தது. தொடர்ந்து உதவிகள் செய்ய தொடங்கினேன்” என KPY பாலா கூறியுள்ளார். 

Continues below advertisement