Tamannah : எனக்கு கிடைத்த வாய்ப்பை காஜல் தட்டிக்கொண்டு போய்விட்டார்.. தமன்னா வருத்தம்   


கடந்த 2006 ஆம் ஆண்டு "கேடி" திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகனாவர் நடிகை தமன்னா. அதனை தொடர்ந்து படிக்காதவன், வீரம், அயன், தேவி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக தடம் பதித்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளை கடந்த இவரது திரைப்பயணத்தில், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார். தமிழ் சினிமாவை காட்டிலும் தெலுங்கு சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. 



ஒரு நேர்காணலின்போது சில இண்ட்டரெஸ்டிங் தகவல்களை பகிந்துள்ளார்  தமன்னா. அவர் இதுவரையில் நடித்த கதாபாத்திரங்களில் தமன்னாவை ஓர் அளவிற்கு ஒப்பிடும் கதாபாத்திரமாக அமைந்த படம் "பையா" திரைப்படம். இது வரையில் இளைஞர்களுக்கு ஒரு கனவு திரைப்படமாக இருப்பது பையா திரைப்படம். அதில் நடித்த அனுபவம் ஒரு மேஜிக் போல இருந்தது என்றார். 


தமன்னா மிஸ் பண்ண படம் :


பல படங்களில் தமன்னா நடித்துள்ளார் ஆனால் ஒரு சில படங்களை தவிர்த்துள்ளார். அப்படி தமன்னா தவிர்த்து அதில் வேறு ஒரு ஹீரோயின் நடித்து அப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன திரைப்படம் என ஏதாவது உள்ளதா? ஏன் இதை மிஸ் பண்ணோம் என்று பீல் பண்ணியது உண்டா? அப்படியென்றால் அது எந்த படமாக இருக்கும்? என்று கேட்டதற்கு  தமன்னா தயங்காமல் பதில் கூறினார். நடிகர் பிரபாஸ் மற்றும் நடிகை காஜல் நடிப்பில் வெளியான தெலுங்கு திரைப்படம் "மிஸ்டர் பர்ஃபெக்ட்". அதில் காஜல் கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதை தவறவிட்டுள்ளார் தமன்னா. அதற்காக இன்று வரை வருத்தப்படுகிறேன் என்றார். அதை பலமுறை படத்தின் இயக்குனரான தசரத்திடம் கூறியுள்ளார். அப்படத்தில் காஜல் கதாபாத்திரம், பாடல்கள், மற்றும் அந்த படமே தமன்னாவிற்கு மிகவும் பிடித்த படமாம்.        
 
ஸ்ருதியின் நட்பு :


தமன்னா மற்றும் ஸ்ருதிஹாசன் இருவருமே நல்ல நண்பர்கள். இருவரும் சேர்ந்து நடிக்க வாய்ப்பு கிடைத்தால் எது போன்ற கதையாக இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள் என்று கேட்டதற்கு நிச்சயமாக ஒரு ஆக்ஷன் திரைப்படமாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவேன். திரையுலகில் ஹீரோயின்கள் நண்பர்களாக இருக்க முடியாது என்கிறார்களே அது எந்த அளவிற்கு உண்மை என்று கேட்டதற்கு நிச்சயமாக இருக்க முடியும். அது அவரவரின் பெர்சனாலிட்டியை பொறுத்தது. சிலர் அது போன்ற நட்பு வட்டாரத்தில் இருக்க சிலர் விரும்ப மாட்டார்கள் ஆனால் எனக்கு நிறைய நண்பர்கள் இந்த திரையுலகில் உள்ளனர் என்றார் தமன்னா. படங்களில் நடிப்பது போலவே நிஜ வாழ்க்கையிலும் மிகவும் துணிச்சலான பெண்மணி தமன்னா. பல தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார் தமன்னா. அது விரைவில் வெளியாகும் என ரசிகர்கள் காத்து இருக்கின்றனர்.