இசை ரேப்பர் பாட்ஷாவின் பாடலில் நடிகை தமன்னா ஆடிய வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 


கேடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை தமன்னா. இருந்தப்போதும் கல்லூரி திரைப்படத்தில் நடித்ததின் மூலம் சிறந்த அங்கீகாரத்தைப்பெற்ற இவர் தொடர்ந்து, வியாபாரி, அயர்ன், பையா, பாகுபலி போன்ற பல்வேறு படங்களில் தன்னுடைய நடிப்பைத் திறம்பட வெளிப்படுத்தியுள்ளார். இதுப்போன்ற பல வெற்றிப்படங்களின் மூலம் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னா, கடைசியாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னதாக ஆக்சன் என்ற தமிழ்ப்படத்தில் நடித்திருந்தார். 


இதனையடுத்து இவருக்கு தமிழில் எந்த பட வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் நடித்து வருகிறார். நடிகைகள் பலர்  வெப் சீரிஸில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்திரா சுப்ரமணியம் இயக்கிய நவம்பர் ஸ்டோரி வெப் தொடரில் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்திருந்தார்.  






கிரைம் மற்றும் திரில்லர் பாணியில் உருவாகி இருந்த இந்த தொடர் ரசிகர்களை அதிகளவில் கவர்ந்தமையால் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார். இதனையடுத்து சினிமாத்துறையை விட்டு வெப் சீரிஸில் நடிப்பதில் தமன்னா அதிக ஆர்வம் காட்டிவருகிறார். இந்நிலையில் ரேப்பரின் பாடல் ஒன்றுக்கு மிகவும் கவர்ச்சியாக நடனம் ஆடியுள்ளார் தமன்னா. 






 


இந்தியாவின் புகழ்பெற்ற ரேப்பரான பாட்ஷாவின் தபாஹி பாடலுக்கு தமன்னா ஆடியுள்ளார். பாடல் தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஏற்கெனவே ஓ சொல்றியா என்ற ஒற்றைப்பாடல் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பினார் சமந்தா. அப்படியாக தமன்னாவுக்கு இந்தப்பாடல் அமையுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேவேளையில் இந்தப்பாடலில் தமன்னா வந்து செல்கிறாரே தவிர பெரிய நடன அசைவுகள் எதுவும் இல்லை என ரசிகர்கள் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.


முழு பாடல்..