ஏபிபி நெட்வொர்க்கின் “ஐடியாஸ் ஆஃப் இந்தியா” நிகழ்ச்சியில் பங்கேற்ற பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். பிப்ரவரி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் நடக்கும் இந்த நிகழ்வானது, வரப்போகும் நாடாளுமன்ற  தேர்தலுக்கு முன்னர் மக்களின் எண்ணம் குறித்த விரிவான விவாதங்களுக்கான முக்கிய தளமாக செயல்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் புகழ்பெற்ற பிரபலங்கள் கலந்து கொண்டு இந்தியாவின் சமூக அரசியல் நிலப்பரப்பின் பன்முக பரிமாணங்களை ஆராய்வதற்காக பங்கேற்றுள்ளார்கள். இதன் மூலம் இந்தியாவின் ஆளுமை பற்றின நுணுக்கமான சொற்பொழிவை வளர்ப்பதற்கு முதன்மையான முயற்சியாக இது உள்ளது. 


 



மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் திரை பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் பான் இந்தியன் நடிகை தமன்னா கலந்து கொண்டு 'பாகுபலி' முதல் 'பாப்லி பவுன்சர்' வரையிலான தன்னுடைய பயணம் குறித்து பேசி இருந்தார். 


நான் சினிமாவில் நுழைந்த அந்த இளம் வயதிலேயே ஒரு நடிகையாக வேண்டும் என்ற தெளிவு எப்படி எனக்குள் எழுந்தது என தெரியவில்லை. அப்போது தான் நான் ஒரு நபரை சந்தித்தேன். அவர் தான் என்னுடைய பெயரில் ஒரு 'A' மற்றும் ஒரு 'H' எழுத்தை கூடுதலாக சேர்த்தால் நன்றாக இருக்கும் என அறிவுரை கொடுத்தார். 


பொழுதுபோக்கு பயன்பாட்டின் வளர்ச்சி குறித்து அவர் பதில் அளிக்கையில்,  "இது பயன்பாட்டை பொறுத்தது தான். ஒருவர் திரைப்படங்களை பார்க்க விரும்பினால் அதை அவர்கள் ஓடிடி மூலம் பார்க்கலாம். அல்லது தொலைபேசி மூலம் எங்கிருந்து வேண்டுமாலும் பார்க்க முடியும்" என்றார். 


டிஜிட்டல் வளர்ச்சியை பற்றி பேசுகையில் அன்று நான் என்னுடைய திரை வாழ்க்கையை துவங்கும் போது செல்லுலாய்டு மட்டுமே பயன்பாட்டில் இருந்தது. எனவே உங்களுக்கு ஒரு திரைப்படத்தை அனுபவித்து ரசித்து பார்க்க வேண்டும் என்றால் திரையரங்கம் சென்று தான் பார்க்க வேண்டும், ஆனால் இன்று அதற்கு எந்த ஒரு தடையும் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார். 


 



இந்நிகழ்ச்சியில் மரண பயம் குறித்து தனக்கிருக்கும் அச்சம் பற்றி மிகவும் வெளிப்படையாக தமன்னா பேசி இருந்தார். "இறப்பு என்பது மனிதர்களாகிய நாம் என்றாவது ஒரு நாள் எதிர்கொண்டு தான் ஆக வேண்டும். அதனால் அதை கண்டு நாம் அச்சம் கொள்ள தேவையில்லை. இருப்பினும் என்னுடைய பெற்றோர் மற்றும்  என்னுடைய அன்புக்குரியவர்களின் இழப்பு குறித்த பயம் எனக்கிருக்கிறது. மக்கள் நம்மை விட்டு பிரிந்து செல்வதை பார்ப்பது அத்தனை எளிதான விஷயமல்ல என கூறி இருந்தார் நடிகை தமன்னா.