வர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்தை நாம் அனைவரும் மிக விரும்புவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள்: ஒன்று சொகுசு; இன்னொன்று உணவு!
டெய்லி ஆபீஸ் போகையில் அரக்கப்பறக்க உணவு உண்டு விட்டு நிதானம் இல்லாமல் ஓடுகிறோம். ஆனால் வர்க் ஃப்ரம் ஹோமில் பிடித்த உணவுகளை வகை வகையாக செய்து உண்டு மகிழ்ந்து நிம்மதியாக வேலையைப் பார்க்க முடிகிறது. இதனாலேயே பலரும் வர்க் ஃப்ரம் ஹோம் கலாச்சாரத்தையே விரும்புகின்றனர்.
நடிகை தமன்னா முன்னணி கதாநாயகிகளில் ஒருவர். பிட்னெஸ்ஸுக்கு பேர் போன இவர் ஒரு மாபெரும் உணவு பிரியையும் கூட ! தமன்னா உணவு பிரியை என்பது எல்லோருக்கும் தெரியும்.இந்நிலையில் நடிகை தமன்னா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் தென்னிந்திய உணவான பொடி இட்லி மற்றும் ஒரு கின்னத்தில் முருங்கைக்காய் சாம்பார் போட்டோவை பதிவிட்டு வர்க்கிங் ஃப்ரம் ஹோம் எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த இன்ஸ்டாகிராம் ஸ்டோரி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
கடைசியாக தமிழில் நடிகை தமன்னா நடிகர் விஷாலுடன் இணைந்து ஆக்சன் திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் வெள்ளை நிற சேலை அணிந்து போட்டோஷூட் ஒன்று செய்திருந்தார்.
அந்த போட்டோ சூட் இணையத்தில் வெளியாகி வைரலாகி இருந்தது.