நடிகர் அஜித்தின் அடுத்த அடுத்த படங்களின் அப்டேட்களை விட அவரது பைக் பயண ஃபோட்டோக்களும் வீடியோக்களும் தான் தற்போதைய இணைய சென்சேஷன்!


தற்போது போனி கபூர் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் AK 61 எனப்படும் பெயரிடப்படாத படத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தக் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள நிலையில் படத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.


இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையான மஞ்சு வாரியர் நடிக்கிறார். வரும் 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சமூக வலைதளங்களில் மாஸ் காட்டும் அஜித்


இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பிலிருந்து முன்னதாக அஜித் லடாக் பயணம் மேற்கொண்டுள்ளார்.


 






சென்னையிலிருந்து விமானம் மூலம் லடாக் பயணித்து அங்கு பைக் டிராவல் செய்த அஜித்தின் ஃபோட்டோக்களும் வீடியோக்களும் முன்னதாக சோஷியல் மீடியா தளங்களில் லைக்ஸ் அள்ளி வைரலாகின.


அஜித் நண்பர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள், கார்கில் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது என அனைத்தும் ஹிட் அடித்தன.


 






அந்த வரிசையில் முன்னதாக புத்த விகாரம் ஒன்றில் நடிகர் அஜித் வழிபடும் காட்சி இணையத்தில் வெளியாகி 
ஹிட் அடித்துள்ளது.


அஜித்தின் இந்த வீடியோவுவை அவரது ரசிகர்கள் இதயங்களை வாரி வழங்கி இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


அடுத்தடுத்த படங்கள்


AK 61 படத்தை அடுத்து அடுத்ததாக லைகா தயாரிப்பில், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் AK 62 படத்தில் நடிக்க அஜித் ஒப்பந்தம் ஆகியுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என  எதிர்பார்க்கப்படுகிறது. 


இப்படங்களைத் தொடர்ந்து நடிகர் அஜித்குமார் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் AK 63 திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு 2023 இறுதியில் தொடங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.