கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகனாவார் நடிகை தமன்னா. இதையடுத்து, அடுத்தடுத்து கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் து முன்னணி நடிகையாக தடம் பதித்துள்ளார். கடந்த 16 ஆண்டுகளை கடந்த இவரது திரைப்பயணத்தில், அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, என தமிழின் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமன்னா தமிழில் கடைசியாக விஷாலுடன் இணைந்து ஆக்ஷன் திரைப்படத்தில் நடித்திருந்தார்.


இந்நிலையில் இவர் தென்னிந்திய ரசிகர்கள் மற்றும் வட இந்திய ரசிகர்கள் குறித்து ஒரு ஒப்பீடு செய்துள்ளார். தென்னிந்திய ரசிகர்கள் சீக்கிரமாக கலைஞர்கள் மீது விசுவாசமான ரசிகராக மாறுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.



10 வருடங்கள் ஆகிறது


இது குறித்து பேசிய தமன்னா ,"தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் விசுவாசமாக இருக்கிறார்கள். கலைஞர்களின் மீது அவர்கள் உணர்வுகளை வைக்கின்றனர், இது ஒரு கலைஞருக்கு மிகவும் அவசியமாக படுகிறது. அவர்களைப் பொறுத்தவரை, நம்மை மனதிற்கு நெருக்கமாக வைத்துக்கொள்கிறாராகள். ஆனால் இந்த விஷயம் வட இந்திய ரசிகர்களிடம் இல்லை என்று நான் சொல்லவில்லை. ஆனால் அது உருவாவதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் ஆகிறது. கிட்டத்தட்ட 10 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் இருப்பவர்களுக்குதான் அந்த நிலை கிடைக்கிறது." என்றார்.


தொடர்புடைய செய்திகள் : June Month Rasi Palan: ஜூன் மாதம் எந்த ராசிக்கு அமோகம்...! எந்த ராசிக்கு அவஸ்தை..! முழு ராசிபலன்கள்...!


பாகுபலி


அதற்காக பான் இந்தியா படமான பாகுபலியை வட இந்திய ரசிகர்கள் கொண்டாடவில்லை என்று கூறவில்லை. நன்றாகவே வரவேற்பு கொடுத்தார்கள். நான் ஏன் இந்தியை விட தென்னிந்திய மொழிகளில் அதிக படங்கள் செய்கிறேன் என்றால், நான் ஒரு பன்முகத்தன்மை கொண்ட நடிகராக இருக்க விரும்புகிறேன். அதனால் எந்த ஜானருக்குள்ளும், எந்த மொழிக்குள்ளும் சிக்கி கொள்ள வேண்டாம் என நினைக்கிறேன்.



படங்கள் தேர்வு


என்னைப் பொறுத்தவரை, எனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் சிறந்ததைத் தேர்வுசெய்ய நான் எப்போதும் முயற்சி செய்கிறேன். எல்லாவற்றிலும் பாகுபலிதான் சிறந்த முடிவு என்று நினைக்கிறேன். செய்யும்போது முழுதாக எது வெற்றிப்படம் என்று தெரியாதுதான், ஆனால் நம் உள்ளுணர்வில் ஒன்று தோன்றும், அதை முழுதாக நம்ப வேண்டும், அது சில சமயங்களில் பலன் அளிக்கும், சில சமயங்களில் நடக்காமல் கூட போகும். நான் ஹிந்தியை விட தென்னிந்திய படங்களை வேண்டுமென்றே தேர்வு செய்யவில்லை, பிடித்ததை தேர்வு செய்கிறேன். நான் என் வேலைகளை தென்னிந்தியா என்றோ வட இந்தியன் என்றோ பிரித்து பார்த்ததில்லை


இவருடைய கைவசம் தற்போது போலா சங்கர், எஃப்3, குர்துண்டா சீதாகலம் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் உள்ளன.இவற்றில் சில படங்களின் படப்பிடிப்புகள் முடிந்து திரைக்கு வர தயாராக உள்ளன. இது தவிர போலே சூடியன், பிளான் ஏ பிளான் பி ஆகிய படங்களை படப்பிடிப்புகள் விரைவில் தொடங்க உள்ளன.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.