சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள அண்ணாத்த படம் தீபாவளி வெளியிடாக வர உள்ளது. இதையடுத்து, அண்ணாத்த படத்தின் அண்ணாத்த மற்றும் சாரல் சாரல் காற்று கடந்த சில தினங்களுக்கு முன்பு வௌியானது. ஆயுதபூஜை தினத்தன்று அண்ணாத்த படத்தின் டீசர் வெளியானது.
இந்த நிலையில், படத்தின் மூன்றாவது பாடலாக மருதாணி இன்று வெளியாகும் என்று படத்தின் தயாரிப்புக்குழுவான சன் பிக்சர்ஸ் நேற்று அறிவித்திருந்தது. இதன்படி, மருதாணி என்ற அந்த பாடல் சற்றுமுன் வெளியானது. ரசிகர்கள் இந்த பாடலை கொண்டாடி வருகின்றனர்.