இந்திய நடிகைகளில் மிகவும் போல்ட்டான ஒரு குணாதிசயம் கொண்ட நடிகைகளில் ஒருவர் டாப்ஸி. அவரின் திரைப்படங்கள் அதை வெளிப்படுத்தினாலும் நிஜ வாழ்க்கையிலும் மிகவும் தைரியமான ஒரு பெண்ணாக பலருக்கு ஒரு உதாரணமாக இருக்கிறார் டாப்ஸி.
தமிழ் சினிமாவில் அறிமுகம்:
வெற்றிமாறன் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியான 'ஆடுகளம்' திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் பெற்றார் டாப்ஸி. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை என பல பிரிவுகளின் கீழ் 2011ம் ஆண்டுக்கான ஆறு தேசிய விருதுகளை கைப்பற்றியது. இப்படத்தின் ஒரு அங்கமாக இருந்த டாப்ஸிக்கு கோலிவுட் ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர். ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக கதைக்கு மிகவும் பொருத்தமாக நடித்திருந்தார். அப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பம், காஞ்சனா 2 , வந்தான் வென்றான், கேம் ஓவர் என ஏராளமான படங்களில் நடித்து வந்தார்.
பாலிவுட் வாய்ப்பு :
தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தாலும் தெலுங்கில் பிஸியாக நடித்து வந்த டாப்ஸி மெல்ல மெல்ல பாலிவுட் பக்கம் சென்றார். இந்தியில் டாப்ஸி நடித்த 'பிங்க்' திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதில் அவரின் நடிப்பு பாராட்டுகளை குவித்தது. அப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழில் அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' என்ற தலைப்பில் வெளியானது.
அதை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜின் வாழ்க்கையை மையமாக வைத்து வெளியான திரைப்படம் 'சபாஷ் மிது'. அப்படத்தில் மிதாலி ராஜுவாக டாப்ஸி நடித்திருந்தார். இப்படம் அவருக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. தற்போது நடிகர் ஷாருக்கான் உடன் 'டங்கி' படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தற்போது வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
மிழில் ரீ- என்ட்ரி :
2021ம் ஆண்டு ஒரு நீண்ட பிரேக்குக்கு பிறகு 'அனபெல் சேதுபதி' திரைப்படத்தில் நடித்திருந்தார் டாப்ஸி. அதை தொடர்ந்து மீண்டும் பரத் நீலகண்டன் இயக்கத்தில் "ஏலியன்" திரைப்படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவில் கலக்க வருகிறார். அதற்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு ரவுண்டு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிகவும் பிஸியாக இருந்து வரும் டாப்ஸி நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட போது தன்னுடைய முதல் காதல் பற்றியும் அது பிரேக் அப் ஆனது பற்றியும் மனம் திறந்து பேசி இருந்தார்.
காதல் பிரேக் அப் :
பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போது சீனியர் ஒருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு உருகி உருகி காதலித்து வந்துள்ளார். அவருக்கும் டாப்ஸி மீது ஒரு பீல் இருந்துள்ளது. அந்த காலகட்டத்தில் மொபைல் போன் எல்லாம் இல்லாததால் தெரு முனையில் உள்ள டெலிபோன் பூத்தில் சந்தித்து பேசி கொள்வார்களாம். பின்னர் ஒரு நாள் அந்த நபர் தான் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும் என கூறி பிரேக் அப் செய்துள்ளார். அந்த நினைவுகளில் இருந்து வெளிவரவே டாப்ஸிக்கு பல நாட்கள் எடுத்து கொண்டதாம்.