நாள்: 22.12.2023 -  வெள்ளிக்கிழமை


நல்ல நேரம்:


காலை 9.15 மணி முதல் காலை 10.15 மணி வரை


மாலை 4.45 மணி முதல் மாலை 5.45 மணி வரை


இராகு:


காலை 10.30 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை


குளிகை:


காலை 7.30 மணி முதல் காலை 9.00 மணி வரை


எமகண்டம்:


மாலை 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை


சூலம் - மேற்கு


மேஷம்


சில விமர்சன பேச்சுக்கள் ஏற்பட்டு நீங்கும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் அதிகரிக்கும். வேலையாட்களிடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். பணி சார்ந்த ரகசியங்களில் கவனம் வேண்டும். வழக்கு பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பங்கள் உண்டாகும். வெற்றி நிறைந்த நாள்.


ரிஷபம்


எதிர்காலம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளை அரவணைத்துச் செல்லவும். மருத்துவ செலவுகள் சிலருக்கு ஏற்படும். செயல்பாடுகளால் ஒருவிதமான அசதிகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சிந்தனைகளில் கவனம் வேண்டும். பணி சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.


மிதுனம்


கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு திருப்தியை ஏற்படுத்தும். உறவினர்கள் மத்தியில் முக்கியத்துவம் அதிகரிக்கும். நினைத்த சில பணிகளில் அலைச்சல்கள் ஏற்படும். விலகி இருந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். சில மாற்றங்களின் மூலம் மேன்மை அடைவீர்கள். வியாபாரம், இடமாற்றம் சார்ந்த எண்ணங்கள் பிறக்கும். அன்பு நிறைந்த நாள்.


கடகம்


எதிர்காலம் சார்ந்த கவலைகள் ஏற்பட்டு நீங்கும். குழந்தைகளை அரவணைத்துச் செல்லவும். மருத்துவ செலவுகள் சிலருக்கு ஏற்படும். செயல்பாடுகளால் ஒருவிதமான அசதிகள் தோன்றி மறையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். சிந்தனைகளில் கவனம் வேண்டும். பணி சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும். தனம் நிறைந்த நாள்.


சிம்மம்


செயல்பாடுகளில் சில மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் நிர்வாக திறமை வெளிப்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களிடம் விட்டுக்கொடுத்து செயல்படவும். பயணங்களால் முன்னேற்றத்தை உருவாக்குவீர்கள். புதிய தொழில் சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதிகாரிகளிடத்தில் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


கன்னி


குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். விதண்டாவாத பேச்சுக்களை தவிர்க்கவும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உயர் அதிகாரிகள் ஆதரவாக இருப்பார்கள். புகழ் நிறைந்த நாள்.


துலாம்


எண்ணிய சில பணிகள் சில தடைகளுக்கு பிறகு முடியும். எதிர்காலம் குறித்த சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். எதிலும் பொறுமையுடன் செயல்படவும். உதவிகள் செய்வதில் கவனம் வேண்டும். பலவீனங்களை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் அலைச்சல்கள் அதிகரிக்கும். கடன் வாங்குவதை தவிர்க்கவும். முயற்சி மேம்படும் நாள்.


விருச்சிகம்:


சகோதரர்களின் அரவணைப்பு மேம்படும். விலை உயர்ந்த பொருட்கள் மீது ஆர்வம் அதிகரிக்கும். தாயின் உடல் ஆரோக்கியம் மேம்படும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் முதலீடுகள் கணிசமாக உயரும். அலுவலகத்தில் மேன்மையான சூழல் அமையும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். கவலை விலகும் நாள்.


தனுசு


அரசு வழியில் அனுகூலம் ஏற்படும். உடனிருப்பவர்களால் ஆதாயம் அடைவீர்கள். எதிர்பாராத சில வரவுகள் உண்டாகும். பழைய நண்பர்களின் சந்திப்புகள் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும். உயர் அதிகாரிகள் பாராட்டும் விதத்தில் செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திடீர் திருப்பங்கள் ஏற்படும். தெளிவு பிறக்கும் நாள்.


மகரம்


உறவினர்களின் மூலம் சஞ்சலங்கள் தோன்றி மறையும். திட்டமிட்ட காரியங்கள் நடைபெறும். சக ஊழியர்களால் நிம்மதியான சூழல் அமையும். வியாபாரத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். தந்தையிடம் அனுசரித்துச் செல்லவும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவு கிடைக்கும். வழக்கு தொடர்பான பணிகளில் சில மாற்றங்கள் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அலைச்சல்கள் உண்டாகும். தடைகள் விலகும் நாள்.


கும்பம்


எதிர்காலம் தொடர்பான சில பணிகளை செய்து முடிப்பீர்கள். தனவருவாயில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இடமாற்றம் குறித்த எண்ணங்கள் உண்டாகும். குறுதொழில் சார்ந்த முயற்சிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுகமான எதிர்ப்புகள் விலகும். எதிர்ப்புகள் குறையும் நாள்.


மீனம்


கணவன், மனைவிக்கிடையே மனம் விட்டு பேசுவதால் புரிதல் உண்டாகும். தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மதிப்பு மேம்படும். தனம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.