ஏபிபி நெட்வொர்க் நிறுவனம் ஐடியாஸ் ஆஃப் இந்தியா என்கிற தலைப்பில் கான்க்ளேவ் ஒன்றை நடத்தி வருகிறது. இந்த நிகழ்வில் நடிகர் டாப்ஸி பன்னு கலந்துகொண்டு உரையாடினார். எழுத்தாளர் சேத்தன் பகத்துடன் உரையாடிய நடிகர் டாப்ஸி, 'ஆல்ஃபா வுமன்' என்ற தலைப்பின் கீழ் அந்த நிகழ்வில் பேசினார். 


அவர் பேசிய நிகழ்வின் முழு வீடியோ கீழ் உள்ள லிங்க்கில் கிடைக்கப்பெறும்.பேட்டியைக் காண கீழே க்ளிக் செய்யவும்.







பாலிவுட்டில் ஆண் நடிகர்கள் சம்பளத்திற்கு இணையாகப் பெண் நடிகர்கள் சம்பளம் குறித்து டாப்ஸியிடம் கேட்டபோது, அவர் 'ஆம், இந்தப் பிரிவினை மிகவும் அதிகமாக உள்ளது, ஆனால் பாலிவுட்டில்  தியேட்டர் இருக்கைகளில் முழுநேரம் அமர்ந்து படத்தைப் பார்க்க எத்தனை பேர் தியேட்டர்களுக்கு வருகிறார்கள் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு நடிகரின் ஊதியத்திற்கான அளவுகோல் அதுதான்’ என்றார்.  மேலும் அவர் கூறுகையில், "ஒரு பெண் நடிகர் பெண்களை மையமாக வைத்து படம் எடுத்தால், ஆண் நடிகர்களுக்கான ரிசர்வேஷன் இருக்கும் போது, பாக்ஸ் ஆபிஸில் பார்வையாளர்களின் கருத்துகளுக்காக அங்கே காத்திருக்க வேண்டியுள்ளது." என்றார். 


சமீபத்தில் வெளியான ஆலியா பட்டின் 'கங்குபாய் கத்தியவாடி' திரைப்படத்துக்குக் கிடைத்த வரவேற்பையும் டாப்ஸி உதாரணமாகக் கூறியுள்ளார். 'கங்குபாய் கத்தியவாடி' படம் போன்று ஒவ்வொரு நடிகையின் படமும் திரையிடப்பட்டால், நடிகைகளுக்கு திரையுலகில் நல்ல லாபம் கிடைக்கும்’ என்று டாப்ஸி கூறினார். ஆனால் இப்போது 'நான் ஒரு தயாரிப்பாளராக இருப்பதால், பாக்ஸ் ஆபிஸில் படத்தின் வெற்றி எவ்வாறு தீர்மானிக்கப்படுகிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது' என்று கூறினார்.


டாப்ஸி நடிப்பில் மிஷன் இம்பாஸிபிள் என்னும் திரைப்படம் 1 ஏப்ரல் 2022 அன்று திரையரங்குகளுக்கு வரவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.