தமிழ், தெலுங்கு  இந்தி என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக இருப்பவர் டாப்ஸி பன்னு. விரைவில் நடிகை சமந்தாவை வைத்து இந்தி படம் ஒன்றையும் தயாரிக்க இருக்கிறார்.  சரி சினிமாவை சற்று ஒதுக்கி வைப்போம். என்றைக்காவது டாப்ஸியின் பெயரை சரியாதான் உச்சரிக்குறமா? இது என்ன பெயர்னு சந்தேகம் வந்திருக்கா உங்களுக்கு... ஆனால் எனக்கு நிறைய முறை இந்த சந்தேகம் வந்திருக்கு. பெங்காலிஸ் பெரும்பாலும் டாப்ஸி , டப்ஸினு பெண்களுக்கு பெயர் வைப்பாங்க. ஆனா; டாப்ஸி தன்னோட சமூக வலைத்தள பக்கங்கள்ல எழுதியிருக்கும்  பெயரை படிக்கும் பொழுது tapsi என்னும் சிம்பிளான பெயருக்கு ஏன் இத்தனை A,E  அப்படினு கேட்டா, அதுக்கு அவங்களே கொஞ்சம் வருத்தத்தோடதான் விளக்கம் கொடுத்திருக்காங்க. 


 






”என்னுடைய பெயர் டாப்ஸி பன்னு (T-A-P-S-I-P-A-N-N-U ) அவ்வளவுதான்.  ஆனால் என்னுடைய அப்பா நியூமராலஜி பைத்தியம். அவர் நினைச்சாரு T-A-P அப்படி சொன்னா , டப்ஸினு ஆயிடும் . அதனால T-A-P-A-S-E-E  அப்படி எழுதினால் டாப்ஸீனு ஆகும்னு சொன்னாரு. அவர் அதோட நிறுத்தவில்லை , PANNU  என்பதை PUNNU என மாற்றினார். அது  ஏன்னுதான் எனக்கு புரியலை. மிகப்பெரிய சோதனையை என்னை வச்சு நடத்திட்டாருனு நினைக்கிறேன். இப்போ என் பெயரை படிச்சா தப்பாசி புன்னு. இதனால பள்ளிக்கூடங்கள்ல வருகை - பதிவு எடுக்கும் போது டீச்சர் எப்போதுமே ரோல் நம்பர் மட்டும் சொல்லிட்டு திணறுவாங்க.  அதுக்கு பிறகு சினிமாவுல நடிக்க வந்த பிறகு நான் ஒரு A ஐ  சேர்த்துக்கிட்டேன். T-A-A-P-A-S-E-E  . இப்போ என் பெயரை சிலர் நல்லா உச்சரிக்கிறாங்கன்னு நினைக்குறேன். ஒரு முறை செக்ல  T-A-A-P-P-S-S-E-E  அப்படினு எழுதி அனுப்பியிருந்தாங்க. அவங்க எல்லாத்தையுமே இரண்டு இரண்டா போட்டுட்டாங்க.” என தனது பெயர் குறித்த சுவாரஸ்யத்தை பகிர்ந்திருக்கிறார் டாப்ஸி பன்னு.