தமிழில் தனுஷ் ஜோடியாக ஆடுகளம் படத்தில் நடித்து பிரபலமான டாப்சி. தொடர்ந்து வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா 2, வை ராஜா வை உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார். தமிழில் சில படங்கள் நடித்திருந்தாலும் இவர் பாலிவுட்டின் பிரபல நடிகைகளில் ஒருவர். இவர் தமிழ், ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதைகளுக்காகவே கோலிவுட், மாலிவுட்,பாலிவுட் போன்றவற்றில் தனி ரசிகர் பட்டாளமே இவருக்கு உண்டு. தற்போது இந்தியில் கவனம்செலுத்து வரும் டாப்சி நடித்துள்ள படம் Dobaaraa. 2018ம் ஆண்டு ஸ்பேனிஷில் வெளியான திரைப்படத்தை Dobaaraa என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். த்ரில்லர் ட்ராமாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியாகவுள்ளது. அதற்கான விளம்பர நிகழ்ச்சிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறார் டாப்சி. அந்த வகையில் மும்பையில் உள்ள மிதிபாய் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்துகொள்ள நேற்று வருகைதந்தார் டாப்சி. அப்போது அவருக்கும் போட்டோகிராபர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
விழா நிகழ்ச்சிக்காக வேகவேகமாக உள்ளே வந்தா டாப்சியிடம் போட்டோகிராபர்கள் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும்படி கேட்டனர்.ஆனால் டாப்சி நேராக விழா நடைபெறும் இடத்துக்கு வேகமாக சென்றார். இதனால் கோபமடைந்த புகைப்படக்கலைஞர்கள் ''நீங்கள் மிகவும் லேட்டாக வருகிறீர்கள். நாங்கள் 2 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கிறோம்'' என்றனர். அதற்கு பதிலளிக்க முயன்ற டாப்சி தன்னுடைய நியாயத்தை எடுத்துக்கூறினார்.பின்னர் போட்டோகிராபர்ஸ் பேச இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கோபமாக பேசிய டாப்சி,என்னை என்ன செய்யச்சொன்னார்களோ அதைத்தான் நான் செய்கிறேன்.என்னிடம் ஏன் கத்துகிறீர்கள்? நான் என்னுடைய வேலையைத்தான் பார்க்கிறேன். நான் எல்லா இடத்துக்குமே சரியான நேரத்துக்கு செல்கிறேன். என்னிடம் மரியாதையாக பேசுங்கள்.நான் உங்களிடம் மரியாதையாக பேசுவேன். எப்போதும் நீங்கள்தான் சரி. நடிகர்கள்தான் தவறு என்றார்.
இந்த திடீர் வாக்குவாதத்தால் அங்கிருந்தவர்கள் ஷாக் ஆகினர். உடனடியாக டாப்சியை சமாதானம் செய்த பாதுகாவலர்கள் அவரை அங்கிருந்து அழைத்துச்சென்றனர்.
முன்னதாக, காபி வித் கரண் நிகழ்ச்சியை கலாய்த்து டாப்சி பேசியதும் இணையத்தில் வைரலானது. காபி வித் கரண் நிகழ்ச்சியில் டாப்சி கலந்துகொள்ளவில்லை. இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் நக்கலாக பதில் அளித்த அவர் காபி வித் கரண் நிகழ்ச்சியை கிழித்து தொங்கவிட்டார். காபி வித் கரண் குறித்து பேசிய அவர், அந்த நிகழ்ச்சிக்கு அழைக்கும் அளவுக்கு என்னுடைய செக்ஸ் வாழ்க்கை அத்தனை சுவாரஸ்யமாக இல்லை என நக்கலாக தெரிவித்தார். காபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவரிடத்திலும் செக்ஸ் வாழ்க்கைகுறித்து கரண் ஜோகர் கேட்பதும் அது சர்ச்சையாவதும் வழக்கமாக உள்ளது. அதனை மறைமுகமாக குறிப்பிட்டே டாப்சி இப்படி பேசியுள்ளார் என இணையவாசிகள் குறிப்பிட்டனர்