இந்திய நடிகைகளில் மிகவும் பிரபலமான மற்றும் போல்ட் கேரக்டர் கொண்ட நடிகைகளில் ஒருவர் நடிகை டாப்ஸி பண்ணு. ஆனால் அவர் இந்த இடத்தை அடைவதற்கு கடுமையான போராட்டங்களை எதிர்கொண்டார். ஆரம்ப காலகட்டங்களில் அவர் சந்தித்த சவால்களை தைரியமாக நிகழ்ச்சி  ஒன்றில் பகிர்ந்து இருந்தார். அவரின் இந்த வெளிப்படையான குணம் தான் பல இலக்குகளை அடைய அவருக்கு உறுதுணையாக இருந்துள்ளது. 


 



தெலுங்கில் அறிமுகம் :


டாப்ஸி பண்ணு தன்னுடைய கடந்த கால திரை வாழ்க்கையில் அவர் சந்தித்த கசப்பான அனுபவம் பற்றி வெளிப்படையாக நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்து இருந்தார். டாப்ஸி பண்ணுவை தெலுங்கு திரையுலகில்  'ஜும்மாண்டி நாதம்'  என்ற படத்தின் மூலம் அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் ராகவேந்திரா ராவ். தன்னை அறிமுகம் செய்த இயக்குநரை பொதுவெளியில் விமர்சனம் செய்யும் தைரியம் பெரும்பாலும் எந்த நடிகைக்கும் வராது. ஆனால் டாப்ஸி அதை மிகவும் துணிச்சலாக செய்தார். 
 


வயிற்று பகுதி தான் ஹைலைட் :
 


பொதுவாக ஹீரோயின் வயிற்று பகுதியில் பூக்களையும் பழங்களையும் எரிவது போல காட்சிகள் அமைக்கப்படுவது வழக்கம். ஆனால் டாப்ஸிக்கு நேர்ந்த அனுபவம் மிகவும் வித்தியாசமானது. அது குறித்து அவர் பகிர்கையில் "நான் நடித்த முதல் படத்தின் முதல் பாடல் வயிற்று பகுதியை மையமாக வைத்து உருவாகி இருந்தது. ஏன் அப்படி எடுக்க அத்தனை ஆர்வம் காட்டினார்கள் என்பது எனக்கு புரியவில்லை. முதலில் அதற்கு நான் தயாராகவும் இல்லை. ஆனால் என்னை அறிமுகப்படுத்திய இயக்குநர் அது போன்ற காட்சிகளை படமாக்குவதில் கைதேர்ந்தவர். அவர் அறிமுகப்படுத்திய நடிகைகளும் புகழ் பெற்றவர்களாக திகழ்பவர்கள். 


 



இயக்குநரின் நோக்கம் :


இயக்குனருக்கு அது 100 வது படம். என்னுடைய வயிற்று பகுதியிலும் பூக்கள் அல்லது பழங்களை வீசுவார்கள் என நான் எதிர்பார்த்தேன். என்னுடைய காட்சிக்கான ஷூட்டிங் ஆரம்பித்தது. அவர் நான் எதிர்பார்க்காத ஒன்றை செய்யப்போகிறார் என்பது எனக்கு தெரியாது. அவர்கள் என்னுடைய தொப்புள் பகுதியில் தேங்காய் மூடியை வீசினார்கள். அதன் மூலம் இயக்குநரின் நோக்கம் என்ன என்பது எனக்கு புரியவில்லை  என தெரிவித்து இருந்தார் டாப்ஸி பண்ணு. 


அப்படத்தை தொடர்ந்து மற்ற தென்னிந்திய படங்களிலும் நடித்த டாப்ஸிக்கு ஒரு சில படங்கள் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதனால் அவரை ராசியில்லாத நடிகை என முத்திரை குத்தப்பட்டார். 


 


டர்னிங் பாயிண்ட் :


அக்ஷய் குமாரின் ஸ்பை திரில்லர் பேபியில் சில காட்சிகளில் மட்டுமே வந்து போனாலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார் டாப்ஸி. அதற்கு பிறகு பாலிவுட் மற்றும் தென்னிந்திய சினிமாவில் கலக்கும் முக்கியமான ஒரு நடிகையானார். காலப்போக்கில் முன்னணி கதாபாத்திரங்களை மட்டுமே தேர்வு செய்து அவர் நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. அன்று முதல் அவரின் திரைவாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது. 



வரவிருக்கும் ப்ராஜெக்ட்ஸ் :


சமீபத்தில் ஷாருக்கான் மற்றும் ராஜ்முகர் ஹிரானியுடன் இணைந்து 'டன்கி' படத்தில் நடித்து இருந்தார். மேலும் அக்ஷய் குமாருடன் 'கேல் கேல் மெய்ன்'  மற்றும் ஃபிர் ஆயி ஹசீன் தில்ருபா படத்திலும் நடித்து வருகிறார். இந்த ஆண்டு இறுதியில் இப்படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.