குத்தாட்டம் போட வைக்கும் STR பாடிய டாலி டாலி ... வெளியானது Double XL சாங்!

வெளியானது Double XL படத்தில் நம்ம சிலம்பரசன் பாடிய "டாலி டாலி..." பாடல். படம் நவம்பர் 4ம் திரையரங்குகளில் வெளியாகிறது.

Continues below advertisement

டி-சீரிஸ், வக்காவ் பிலிம்ஸ் மற்றும் ரெக்லைனிங் சீட்ஸ் சினிமா நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து தயாரித்துள்ள காமெடி கலந்த டிராமா திரைப்படமான Double XL படத்தை இயக்கியுள்ளார் சத்திரம் ரமணி.   இப்படத்தின் தாழி தாழி... பாடலை தற்போது சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.  

Continues below advertisement

 

அனைவரையும் சிரிக்க வைக்க இருக்கும் காமெடி டிராமா :


உடல் பருமனான இரண்டு பெண்களும் அவர்களின் விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் நவம்பர் 4ம் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது. ஹூமா குரேஷி மற்றும் சோனாக்ஷி சின்ஹா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தில் அறிமுகமாகிறார் கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான். காலா திரைப்படத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் நடித்த ஹூமா குரேஷி மற்றும் ஷிகர் தவான் நடனமாடும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

 

STR பாடிய பெப்பியான பப் பாடல் இதோ : 

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகர் மஹத் ராகவேந்திரா. ஏற்கனவே நடிகர் மஹத்  மாநாடு, மங்காத்தா, ஜில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது Double XL திரைப்படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி ஆகியுள்ளார். இப்படத்தின் டாலி டாலி ... எனும் மிகவும் பெப்பியான பப் பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இந்த பாடலில் மஹத், சோனாக்ஷி சின்ஹாவும், ஹூமா குரேஷி உள்ளிட்டோர் கலக்கலாக குத்து குத்தி இருக்கிறார்கள்.  சோஹாலி சென் இசையமைப்பில் இந்த பாடலை பாடியுள்ளார்கள் சோஹாலி சென் மற்றும் நம்ம தலைவன் STR. இது தான் முதல்முறையாக நம்ம சிலம்பரசன் பாடும் ஹிந்தி பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்புவின் பாடல்களுக்கென்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அவர்களுக்கு இந்த பாடல் ஒரு விருந்தாக அமையும்.  இன்றைய இளைஞர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல் இருப்பதால் இப்பாடல்  நிச்சயமாக ஹிட் பாடலாக வெற்றி பெறும். இந்த அறிவிப்பை இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்ந்துள்ளார் மஹத். 

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola