தமிழ் சினிமாவின் பன்முக கலைஞர்களில் ஒருவர் டி ராஜேந்தர். இவருக்கு கடந்த மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில், சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு வயிற்றில் இரத்தக்கசிவு இரத்தக்கசிவு ஏற்பட்டது தெரிந்த நிலையில், தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கடந்த ஜூன் 14 ஆம் தேதி மகன் சிலம்பரசன் மற்றும் குடும்பத்தினருடன் அமெரிக்காவிற்கு சென்றார். பின்னர் சிகிச்சை முடித்துக் கொண்டு அமெரிக்காவில் ஒரு மாத காலம் தங்கி குடும்பத்துடன் ஓய்வெடுத்தனர்.


அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் அவர் பூரண குணமடைந்து விட்டதாக அவரது செய்தி தொடர்பாளர் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முன்னதாக, உடல்நலம் தேறியுள்ள டி ராஜேந்திரனின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், திரைப்பட இயக்குநா் T.ராஜேந்தா் ஒருமாத கால மருத்துவ சிகிச்சை முடிந்து, இன்று அதிகாலை 2.30 மணிக்கு சென்னை சா்வதேச விமானநிலையம் எமரேட்ஸ் ஏா்லைன்ஸ் பயணிகள் விமானத்தில்  அமெரிக்காவிலிருந்து துபாய் வழியாக சென்னை திரும்பினார். அவருடன் இளைய மகன் குறளரசன், மகள் இலக்கியா, மருமகன் அபிலாஷ், பேரன் ஜேசன் ஆகியோர் நாடு திரும்பினர். இன்று சென்னை திரும்பிய டி.ஆர். சிறிய ஓய்வுக்கு பிறகு முதற்கட்டமாக தனக்கு உதவி செய்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து நன்றி கூற இருக்கிறார்.






தான் முழு உடல் நலம் பெற்று மகிழ்ச்சி, உற்சாகம் மற்றும் துடிப்புடன் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்த ரசிகர்கள், குடும்ப நண்பர்கள், கலையுலக நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் டி ஆர் நன்றியை தெரிவித்து இருக்கிறார். 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண