தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யனாக இருந்த இயக்குனர் அட்லீ தனது முதல் இயக்கத்திலேயே ஒரு சூப்பர் ஹிட் படம் கொடுத்தவர். அட்லீ இயக்கத்தில் 2013ம் ஆண்டு நடிகர் ஆர்யா, ஜெய், நஸ்ரியா மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன் தாரா நடித்த திரைப்படம் "ராஜா ராணி". இப்படம் நேற்று வெளியானது போல் இன்றும் பசுமையை நினைவுகளில் இருந்தாலும் இப்படம் வெளியாகி 9 ஆண்டுகளை கடந்து விட்டது.
ரொமான்டிக் காதல் கதை :
தனது முதல் முயற்சியிலேயே ஒரு அழகான காதல் கதையை எந்த ஒரு சொதப்பலும் இல்லாமல் மிகவும் அழகாக ரசிக்கும் படி திரைக்கதையை நகர்த்தியிருந்தார் இயக்குனர் அட்லீ. ஒரு காதல் தோல்வி அடைந்தால் அதனோடு வழக்கை முடிவதில்லை. அதற்கு பிறகும் வாழ்கை உள்ளது என்பதை மிகவும் எமோஷனலாக படமாக்கியது பாராட்டுகளை பெற்றது. நயன் தாரா, ஆர்யாவின் ஜோடி மிகவும் அழகான பொருத்தமான ஜோடியாக இருந்தது. படத்தில் கொஞ்ச சீன்களில் மட்டுமே ஜெய் மற்றும் நஸ்ரியா வந்தாலும் ரசிகர்களின் கவனத்தை பெற்றனர். நயன் தாரா ப்ளாஷ் பேக் மற்றும் ஆர்யாவின் ப்ளாஷ் பேக் இரண்டுமே படத்திற்கு ஹைலைட்டாக அமைந்தது. திருமணத்திற்கு பிறகு எலியும் புனையும் போல் இருந்தவர்கள் ப்ளாஷ் பேக் கதைகளை தெரிந்து கொண்ட பின்பு ஏற்படும் மனநிலை மாற்றத்தால் ஒன்று சேர துடிக்கிறார்கள் ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காதலை வெளிப்படுத்தாமல் ஆர்யா மற்றும் நயன் படும் தவிப்புகள் மிகவும் அழகு. கடைசியில் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் திரைக்கதை.
பாராட்டை பெற்ற நேர்த்தியான திரைக்கதை அமைப்பு:
மிகவும் அழகான ஒரு காதல் கதையை கொடுத்து தனது முதல் படத்திலேயே மிகவும் பிரபலமானார் இயக்குனர் அட்லீ. படத்தில் நடிகர் சந்தானத்தின் பங்கும் சிறப்பாக அமைந்தது. படத்தில் குசும்புகளும் அதிகம் இருந்ததால் ரசிகர்களை எளிதில் கவர்ந்தது. ஜி. வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். அழுத்தமான மூன்று காதல் கதைகளை மிகவும் நேர்த்தியாக, அளவான காமெடியோடு ஒரு முழு நீள எண்டர்டெயின்மெண்ட் திரைப்படமாக இது அமைந்தது.