நல்ல நேரம்:
காலை- 7:30 மணி முதல் 8:30 மணி வரை
மாலை- 4:30 மணி முதல் 5:30 மணி வரை
கெளரி நல்ல நேரம்:
பகல் - 10:30 மணி முதல் 11:30 மணி வரை
இரவு - 9:30 மணி முதல் 10:30 மணி வரை
ராகுகாலம்:
காலை- 9 மணி முதல் 10:30 மணி வரை
குளிகை:
காலை 6 மணி முதல் 7:30 மணி வரை
எம கண்டம்:
மதியம் 1:30 மணி முதல் 3 மணி வரை
சூலம், பரிகாரம்:
கிழக்கு, தயிர்
சந்திராஷ்டமம்:
மகம்
இன்றைய ராசிபலன்கள்:
மேஷம்:
இன்று கொஞ்சம் நெருக்கடிகளை சந்திக்கும் நிலை வரலாம். முடிந்த வரை முக்கிய முடிவுகளை இன்று தவிர்க்கவும். கோபத்தை வெளிப்படுத்துவதை தவிர்க்கவும். பொருளாதார சிரமங்கள் தவிர்க்க முடியாது. ஆனால், அவை இன்று மட்டுமே. குடும்பத்தாரிடம் மனம் விட்டு பேசுங்கள்.
ரிஷபம்:
இன்று எதிர்பார்த்த லாபம் வராது. நஷ்டத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்பதை பார்க்க வேண்டும். புதிய முயற்சிகளை கை விடவும். வீண் சிந்தனைகளை தவிர்க்கவும். கடன் முயற்சிகளை இன்று கைவிடவும். ஷேர் மார்க்கெட் போன்ற விவகாரங்களில் அதிக கவனம் தேவை.
மிதுனம்:
இன்று நல்ல ஓய்வு காண வேண்டிய நாள். வீண் அலைச்சலை தவிர்க்கவும். அது எந்த வகையிலும் இன்று பயன் தராது. மனஉளைச்சல் ஓரளவிற்கு தீரும். கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். பிறரிடம் புரிந்து பேசுங்கள். குழந்தைகள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள்.
கடகம்:
யோகமான நாள் இன்று. பரிசுகள், குலுக்கல் பரிசுகள் கிடைக்கும் அளவிற்கு யோகமான நாள். எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும். வீட்டில் மகிழ்ச்சி பொங்கும். நண்பர்களிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும். போக்குவரத்தில் கவனம் தேவை.
சிம்மம்:
எடுத்த காரியங்களில் நன்மை கிடைக்கும் நாள் இன்று. தெய்வ வழிபாடு மேன்மை தரும். வியாபாரங்களில் லாப செய்திகள் வரும். விலகியவர்கள் கூட தேடி வந்து உதவுவார்கள். எதுவும் கிடைக்கவில்லையே என ஏங்க வேண்டாம். சரியான நேரத்தில் அது தேடி வரும்.
கன்னி:
செலவுகள் தவிர்க்க முடியாத நாள். மருத்துவ செலவு, சுபச்செலவு, வீண் செலவு என ஏதாவது ஒரு வழியில் செலவை சந்திக்கலாம். பிக்பாக்கெட் போன்ற விரையங்களும் வரலாம். எனவே பாதுகாப்பாகவும், பத்திரமாகவுமு் பயணம் செய்யுங்கள். காலையும், மாலையும் இன்று இறை வழிபாடு செய்தால், பலன் கிடைக்கலாம்.
துலாம்:
நல்ல நட்பு கைகூடும். புதிய நண்பர்களுடன் இணைவீர்கள். தவறாக புரிந்தவர்கள், உங்கள் எண்ணத்தை மாற்றலாம். விருந்துகள், நல்ல உணவு என இன்றைய நாள் மகிழ்வாக இருக்கும். வீட்டில் பெரியவர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். சகோதரர்கள் ஆதரவு கிடைக்கும்.
விருச்சிகம்:
தோல்விகளை தழுவுகிறோம் என்பதற்காக முயற்சி செய்யாமல் இருக்கக்கூடாது. விடாமுயற்சி பலன் தரும் நாள். எதுவும் எளிதில் கிடைக்காது; போராடினால் கிடைக்கும். அப்படியொரு நாள் இன்று. குடும்பத்தாருடன் அன்பாக பழகவும். வீண் கோபங்களை தவிர்க்கவு
தனுசு:
ஷேர் மார்க்கெட் போன்ற விவகாரங்களில் முதலீடு செய்தவர்களுக்கு, இன்று ஆதாயமான நாள். போட்டதை எடுப்பது என்பார்கள். அது மாதிரி, போட்டதை விட கூடுதலாக கிடைக்கும். அதே நேரத்தில் கிடைப்பதை பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். உடல்நலத்தில் அதிக கவனம் தேவை.
மகரம்:
பயம் தொற்றிக்கொள்ளும் நாள் இன்று. தெய்வ வழிபாடு மன வலிமை தரும். எதையும் துணிந்து எதிர்கொள்ளுங்கள் சோர்ந்து போய்விட வேண்டாம். பெற்றோர், பெரியோர் அறிவுரைகளை பெறுங்கள். உடன் பணிபுரிவோிடத்தில் அன்பாக நடந்து கொள்ளுங்கள்.
கும்பம்:
தேவையற்ற கவலைகள் குடியேறும். தொழில் தொடர்பான விவகாரங்களில் அவசர முடிவு வேண்டாம். பிள்கைள், பெற்றோர் மீது குறை வேண்டாம். வாழ்க்கை துணையுடன் அன்போடு இருங்கள். சுபச்செலவுகள் வரலாம். ஆனால், பெரிய பாதிப்பை தராது.
மீனம்:
இன்றைய நாள் முழுவதும் வெற்றியான நாளாக அமையப்போகிறது. போகிற போக்கில் எடுத்ததை முடிப்பீர்கள். திட்டமிட்டவை நிறைவேறும். தொழில் துறையினருக்கு இன்றைய நாள் சிறப்பான நாள். குழந்தைகள், உடல்நலனில் கொஞ்சம் அக்கறை செலுத்த வேண்டும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்