ப்ரைம் வீடியோவில் வெளியான சுழல் சீரிஸ், சிறந்த ட்ராமா சீரிஸுக்கான ஏசியன் அகாடமி க்ரியேட்டிவ் விருதுகள் வழங்கும் தேசிய விருதினை பெற்றுள்ளது. 






விக்ரம் வேதா புகழ் புஷ்கர் காயத்ரி எழுத்தில் உருவாகியுள்ள சுழல் வெப்சீரிஸ் கடந்த ஜூன் 17 ஆம் தேதி வெளியானது.  வால்வாட்சர் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இயக்கத்தில் உருவான சுழல் – தி வோர்டெக்ஸ் தொடர், தமிழ், ஹிந்தி,கன்னடம், மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளில் வெளிவந்தது. அபுதாபியில் உள்ள யாஸ் தீவில் தற்போது நடைபெற்று வரும் IIFA வீக்கெண்ட் 2022-இல் தமிழில் எடுக்கப்பட்ட அதன் முதல் லாங் ஃபார்ம் ஸ்கிரிப்ட் ஒரிஜினல் தொடரான சுழல்- தி வொர்டெக்ஸின் உலகளாவிய பிரீமியரை பிரைம் வீடியோ அறிவித்தது. டிடெக்டிவ் தொடரான சுழல் - தி வோர்டெக்ஸ், புஷ்கர் மற்றும் காயத்ரியால் படைக்கப்பட்டுள்ளது.


இயக்குனர்கள் பிரம்மா மற்றும் அனுசரண்.எம் இத்தொடரை இயக்கியுள்ளனர். இதில் கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், ஸ்ரேயா ரெட்டி மற்றும் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இது எட்டு. எபிசோட்கள் கொண்ட தொடராக வெளியானது. இந்த க்ரைம் த்ரில்லர், இந்தியாவின் தென்பகுதியில் உள்ள ஒரு சிறிய நகரத்திலிருந்து காணாமல் போன பெண் குறித்த விசாரணையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட 240 நாடுகளில்   சுழல் - தி வோர்டெக்ஸை சீரிஸை கண்டு மகிழ்ந்தனர்.




முன்னதாக, இந்த சீரிஸ் வெளியான போது இத்தொடர் குறித்து பேசிய புஷ்கர் மற்றும் காயத்ரி, "பொழுதுபோக்கு என்பது மொழிக்கு அப்பாற்பட்டது என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். பார்வையாளர்கள், இன்று உலகம் முழுவதிலுமிருந்து நல்ல கதைகளைக் கேட்கத் தயாராக இருக்கிறார்கள்.


அமேசானில் ஸ்ட்ரீமிங் ஆகும் சுழல் - தி வோர்டெக்ஸ் மூலம் நம் நாட்டின் சிறந்த உள்ளடக்கத்தை வெளிநாடுகளுக்கும் எடுத்துச் செல்லும் சிறந்த தொடக்கமாக அமைந்துள்ளது. மேலும், IIFA போன்ற உலகளாவிய நிகழ்வில் இத்தொடரை வெளியிடும் வாய்ப்பைப் பெறுவது உண்மையிலேயே ஒரு கனவு நனவானது என்றே கூறலாம்.அமேசான் பிரைம் வீடியோவிற்கும், IIFA குழுவிற்கும் இந்த சம்மதத்துக்காக நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம். மர்மம் நிறைந்த இக்கதை பார்வையாளர்களை இருக்கைகளின் விளிம்பில் வைத்திருக்கும்” என்றார்கள்.






இந்த சீரிஸை பாராட்டி நடிகர் தனுஷும் அவரது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவு செய்தார் என்பது குறிப்பிடதக்கது