நடிகை அமலா பால், தன் நெருங்கிய பள்ளித் தோழி சமீபத்தில் குழந்தை பெற்றதை அடுத்து தன் பிற தோழிகளுடன் இணைந்து பார்ட்டி செய்து இன்ஸ்டாவில் வீடியோ பகிர்ந்துள்ளார்.
அமலா பாலின் இந்த நெருங்கிய பள்ளித் தோழியான ரேச்சல் மானி, மலையாள பிக் பாஸ் புகழ் பியர்லி மானியின் தங்கை ஆவார். இந்நிலையில், சமீபத்திய ஹிட் மலையாளப் பாடலான ’ஓலுலேரே’ பாடல் பின்னணியில் அட்டகாசமாக தன் தோழிகளுடன் அமலாபால் கொண்டாடும் இந்த வீடியோ இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.
கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகை அமலா பால், தமிழில் ’சிந்து சமவெளி’ படத்தில் அறிமுகமாகி ’மைனா’ படம் மூலம் பெரும் பிரபலமடைந்தார். தொடர்ந்து விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்த அமலா பால், ’தெய்வத் திருமகள்’ படத்தில் இயக்குநர் விஜய்யுடன் காதலில் விழுந்து அவரை திருமணம் செய்துகொண்டார்.
ஆனால் எதிர்பாராதவிதமாக 2017ஆம் ஆண்டு இவர்கள் விவாகரத்து பெற்ற நிலையில், அமலா பால் தொடர்ந்து திரைத்துறையில் இயங்கி வருகிறார்.
முன்னதாக குட்டி ஸ்டோரி’, ’பிட்ட கதலு’ ஆகிய ஆந்தாலஜி படங்களில் அமலா பால் நடித்த நிலையில், அவரது நடிப்பில் விரைவில் மலையாளத்தில் ’ஆடுஜீவிதம்’ எனும் படம் வெளியாக உள்ளது.
இதனிடையே இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் அமலா பால் தொடர்ந்து தன் பர்சனல் பக்கங்கள், இதர விஷயங்கள் குறித்து தன் ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்