சூர்யா நடிப்பில் வெளியாக உள்ளவிஸ்வநாத் & சன்ஸ்படத்திற்கு ரிலீஸுக்கு முன்பே பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. படத்தின் வணிக ரீதியான ஒப்பந்தங்கள் தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினை காரணமாக, தமிழகத்தில் பிரபலமான பல திரையரங்குகளில் படம் வெளியாகாது என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Continues below advertisement

ரிலீஸ் சிக்கலில் விஸ்வநாதன் & சன்ஸ் 

வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள விஸ்வநாதன் & சன்ஸ் திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக இருந்தது. இந்த நிலையில் வி நியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே லாப பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை உடன்படிக்கைக்கு வராத காரணத்தினால் நாளை படம் பல்வேறு திரையரங்குகளில் வெளியாகாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

உடன்படிக்கைக்கு வராத பேச்சுவார்த்தை

சூர்யா நடிப்பில் கடந்த மே மாதம் வெளியான கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ350 கோடி வசூல் செய்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. இதனால் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தை பெரும் தொகை கொடுத்து  விநியோகஸ்தர்கள் வாங்கியுள்ளார்கள். தமிழ்நாட்டில் விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் ரிலீஸ் உரிமையை ப்ரிமார்க் ப்ரோடக்‌ஷன் ரூ 40 கோடிக்கு வாங்கியுள்ளது. அதே நேரம் திரையரங்க உரிமையாளர்களும் தங்களுக்கு கூடுதல் லாப பங்கீடு வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால் அவர்கள் கேட்கும் லாப சதவீதத்தை விநியோஸ்தர்கள் தர மறுத்ததால் பல்வேறு திரையரங்குகள் படத்தை வெளியிடுவதற்கான ஒப்பந்தத்தை கையெழுத்திட மறுத்துள்ளன. இதன் காரணமாகவே படத்தின் ரிலீஸ் பல்வேறு முக்கிய திரையரங்குகளில் தடைபட்டுள்ளது 

Continues below advertisement

எந்த திரையரங்குகளில் வெளியாகாது

சென்னையைப் பொறுத்தவரை பிரபல திரையரங்குகளான ரோகிணி , ராக்கி சினிமாஸ் , ஜிகே சினிமாஸ் , முருகன் திரையரங்கம் , வரதராஜா திரையரங்கம் , வெற்றித் திரையரங்கம் ஆகிய திரையரங்குகளில் தற்போது வரை ஒப்பந்தம் போடப்படவில்லை. 

இதுதொடர்பாக சென்னை அம்பத்தூரில் உள்ள ராக்கி சினிமாஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘விஸ்வநாத் & சன்ஸ்திரைப்படத்தை தங்களது எந்த திரையரங்கிலும் திரையிடுவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்படவில்லை என்றும், எனவே ராக்கி சினிமாஸில் இப்படத்திற்கான முன்பதிவு அல்லது திரையிடல் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களது மற்ற திரைப்படங்களுக்கான வார இறுதி அட்டவணை அம்பத்தூர் ராக்கி சினிமாஸில் District தளத்திலும், மற்ற மூன்று திரையரங்குகளுக்கான முன்பதிவு BookMyShow-விலும் வெளியாகியுள்ளதாக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, வெற்றி திரையரங்குகள் உரிமையாளர் ராகேஷ் கவுதமன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவும் கவனம் பெற்றுள்ளது. ‘விஸ்வநாத் & சன்ஸ்படத்திற்கான வணிக விதிமுறைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் எதிர்பார்த்தபடி சாதகமாக முடியவில்லை என்றும், நீண்ட ஆலோசனைக்குப் பிறகு சென்னை வெற்றி திரையரங்கில் மட்டும் படத்தை வெளியிட வேண்டாம் என இறுதி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படம் வெளியாகும் நேரத்தில் தமிழகத்தின் முக்கியமான திரையரங்குகளில் இதுபோன்ற சிக்கல் ஏற்பட்டிருப்பது சூர்யா ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பல பிரபல திரையரங்குகளில் படம் வெளியாகாத சூழல் உருவாகியிருப்பது, ரிலீஸுக்கு முன்பேவிஸ்வநாத் & சன்ஸ்படத்திற்கு ஏற்பட்டுள்ள மிகப்பெரிய தடையாக பார்க்கப்படுகிறது.