நடிகை அனுபமா பரமேஸ்வரன் மற்றும் துருவ் விக்ரமின் காதல் விவகாரம் தற்சமயம் மிக வைரலான பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக அனுபமா சமீபத்தில் அளித்த பேட்டியில் தனது முன்னாள் காதலன் குறித்து கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார். இதனால் கொந்தளித்து வரும் அந்த நடிகரின் ரசிகர்கள் அனுபமா காதலித்து வந்தபோது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட பதிவுகளை சுட்டிகாட்டி அவர்மீது கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறார்கள். 

Continues below advertisement

துருவ் அனுபமா காதல் சர்ச்சை

மாரி செல்வராஜ் இயக்கிய பைசன் படத்தில் துருவ் விக்ரம் மற்றும் அனுபமா இருவரும் இணைந்து நடித்தார். இந்த படத்தின் போது அவர்கள் இருவரும் இடையில் காதல் உருவானதாக கூறப்படுகிறது. இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது காதலை மறைமுகமாக ரசிகர்களுக்கு தெரிவித்து வந்தார்கள். இந்த நிலையில் அனுபமா கடந்த ஜூலை 20 ஆம் தேதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது காதல் தோல்வி குறித்து பதிவிட்டது பரவலாக பேசுபொருளானது. இதனைத் தொடர்ந்து சமீபத்தில் யூடியுப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அனுபமா கடந்த இரண்டு ஆண்டுகால காதலில் தான் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல்வேறு சித்ரவதைகளை அனுபவித்ததாக கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். 

மேலும், தான் ‘narcissistic abuse’ என குறிப்பிடும் உளவியல் ரீதியான துன்புறுத்தலை எதிர்கொண்டதாகவும் அவர் கூறியிருக்கிறார். அந்த நபரின் நடவடிக்கைகள் சில நேரங்களில் நன்றாகவும், சில நேரங்களில் மிகவும் மோசமாகவும் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Continues below advertisement

அனுபமாவின் பழைய பதிவுகளை சுட்டிக்காட்டும் நெட்டிசன்கள்

இதனிடையே, அனுபமாவின் தற்போதைய பேச்சை அவரது பழைய சமூக வலைதளப் பதிவுகளுடன் ஒப்பிட்டு நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். துருவ் விக்ரமை காதலித்த காலத்தில், அந்த உறவு குறித்த தனது மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அனுபமா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தி வந்ததை அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். துருவ் விக்ரமுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள், அவரை குறிப்பதாக கருதப்பட்ட பதிவுகள் என அந்தக் காலகட்டத்தில் தனது காதலை வெளிப்படையாகவே அனுபமா கொண்டாடி வந்த நிலையில், தற்போது காதல் தோல்விக்குப் பிறகு அந்த உறவில் ஏற்பட்ட எதிர்மறையான அனுபவங்களை மட்டுமே முன்வைப்பது ஏன் என அவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

காதலித்தபோது அந்த உறவை வெளிப்படையாக கொண்டாடிவிட்டு, தற்போது பிரிவு ஏற்பட்டதும் துருவ் விக்ரம் மீது மொத்தப் பழியையும் சுமத்துவது எப்படி நியாயம்?” என்பதே நெட்டிசன்களின் முக்கிய விமர்சனமாக உள்ளது. குறிப்பாக, ஒரு உறவில் இருந்தபோது அதில் கிடைத்த நல்ல அனுபவங்களையும் மகிழ்ச்சியையும் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்ட ஒருவர், அந்த உறவு முடிந்த பிறகு எதிர்மறையான பக்கங்களை மட்டும் பேசுவது முரண்பாடாக இல்லையா என்றும் அவர்கள் கேட்டு வருகின்றனர்.