ஒவ்வொரு முறை நடிகர் சூர்யாவின் திரைப்படம் வெளியாகும்போதும் தனது வசீகர நடிப்பாலும், தனித்துவமான தோற்றத்தாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ள ஜெய் பீம் திரைப்படம் இன்று அமேசான் பிரைமில் வெளியாகி உள்ளது. திரைப்படத்தின் வெளியீடு நாளான இன்று காலை முதலே ஜெய் பீம் சம்பந்தமான ஹேஷ்டேக்குகள் டிரெண்டான நிலையில், இப்போது திரைப்படம் வெளியாகி உள்ளது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துருவின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகர் சூர்யா இப்படத்தில் காவல்துறையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் மக்களுக்கு நீதிபெற்று கொடுத்த உண்மை கதையில் நடித்துள்ளார். சாதி வெறிக்கு எதிரான அழுத்தமான வசனங்களுடன் வெளியாகி இருக்கும் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் அண்மையில் வெளியானது. தா.செ.ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ரெஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்திருக்கும் இப்பட்டத்தை சூர்யாவின் 2டி பிரொடெக்சன்ஸ் தயாரித்து இருக்கிறது.
இந்த திரைப்படத்திற்கு தணிக்கைக் குழு ’ஏ’ சான்றிதழ் வழங்கியுள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகும் திரைப்படம் ஒன்றுக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்படுவது இது இரண்டாம் முறை. கடைசியாக 2010ல் வெளியான ரத்த சரித்திரம் படத்துக்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்