Actor Surya wishes Ajay Devgan : சிங்கம் 2, கைதி படம் பார்க்க ஆசை.. அஜய் தேவ்கனுக்கு கோரிக்கை விடுத்த சூர்யா

புது டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஒருவருக்கொருவர் அன்பையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். 

Continues below advertisement

புது டெல்லியில் நடைபெற்ற தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் நடிகர் சூர்யா மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் ஒருவருக்கொருவர் அன்பையும் வாழ்த்துக்களையும் பரிமாறிக்கொண்டனர். 

Continues below advertisement

தென்னிந்திய திரைப்பட துறையில் சிறந்து விளங்கும் கலைஞர்களை கௌரவிக்கும் வகையில் தேசிய விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 68 வது தேசிய விருதுகள் வழங்கும் விழா நேற்று மாலை புது டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறந்த கலைஞர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை குடியரசு தலைவர் திரௌபதி முர்மு அவர்கள் விருதுகள் வழங்கி கௌரவித்தார். 

 

நடிகர் சூர்யா - நடிகர் அஜய் தேவ்கன் :

நமது தமிழ் சினிமாவின் "சூரரைப் போற்று" திரைப்படம் 5 பிரிவுகளில் விருதை தட்டி சென்றது. சிறந்த படம், சிறந்த திரைக்கதை, சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இசையமைப்பாளர் என 5 விருதுகளை பெற்றது. மேலும் தன்ஹாஜி: தி அன்சங் வாரியர் எனும் பாலிவுட் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார் நடிகர் அஜய் தேவ்கன். இது அஜய் தேவ்கன் பெரும் மூன்றாவது தேசிய விருதாகும். இதற்கு முன்னர் 1998 ஆம் ஆண்டு வெளியான Zakhm படத்திற்காகவும் மற்றும் The Legend Of Bhagat Singh ஆகிய திரைப்படத்திற்காகவும் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அஜய் தேவ்கனுக்கு விடுத்த வேண்டுகோள் : 

இந்த விழாவில் கலந்து கொண்ட  நடிகர் சூர்யா மற்றும் நடிகர் அஜய் தேவ்கன் இருவரும் பரஸ்பரம் தங்களது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் அஜய் தேவ்கனுடன் எடுத்து கொண்ட புகைப்படம் ஒன்றினை பகிர்ந்து அதற்கு ஒரு குறிப்பையும் பதிவிட்டுள்ளார். "உங்களின் அன்பிற்கும் அரவணைப்பிற்கும் மிக்க நன்றி. இந்த அழகான தருணத்தை உங்களுடன் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களின் அடுத்த கைதி மற்றும் சிங்கம் திரைப்படத்திற்காக காத்திருக்கிறேன் என பதிவிட்டுள்ளார் நடிகர் சூர்யா.      

 

Continues below advertisement