மாஜி டிக்டாக் பிரபலங்களின் உலகம் தனியானது. அலாதியானது. அந்த சாம்ராஜ்யத்தில் அவர்களுக்குள்ளேயே அடித்துக்கொள்வார்கள். கொஞ்சிக்கொள்வார்கள். அப்புறம் அடித்து நாறிக்கொள்வார்கள். டிக்டாக் மாதிரியான சுய பயன்பாட்டு செயலி இருந்தவரை இவர்கள் அட்ராசிட்டி குறிப்பிட்ட இடத்தில் மட்டும் இருந்து வந்தது. டிக்டாப் தடை செய்யப்பட்டு, எப்போது இவர்கள் எல்லாம் யூடியூப் பக்கம் வந்தார்களோ.... இவர்கள் சண்டைகள் பொதுவெளிக்கு வரத்துவங்கின. யார், யார் கூட சண்டை போடுறாங்கனு கூட சரியா தெரியாது. ஆனா இப்போதைக்கு சிக்கந்தர் என்கிற சிக்காவை வீட்டில் சென்று செருப்பால் அடித்த சூர்யா தேவி பிரச்னை தான் இப்போதைக்கு அந்த உலகின் டிரெண்ட். ரவுடி பேபி சூர்யா உடன் இருந்த சிக்காவை சூர்யா தேவி டார்க்கெட் செய்தது ஏன் என்பது ஒரு புறமிருக்க. தாக்குதலுக்குப் பின் தனது யூடியூப் சேனலில் சூர்யா தேவி பேசியிருக்கும் காட்சிகள் அதிர்ச்சியானது. கெட்ட வார்த்தைகள் அவர்களிடமிருந்து வருவது புதிதல்ல. அவை அச்சிலும் ஏற்ற முடியாது, காது கொடுத்து கேட்கவும் முடியாது. ஆனால் நேரடியாக கொலை மிரட்டல் விடுவதும், போலீஸ், கோர்ட் பற்றியெல்லாம் பேசுவதும் ஒரு கெத்து தான்! இதோ சிக்கா மற்றும் ரவுடி பேபி சூர்யாவுக்கு மிரட்டல் விடுத்து சூர்யா தேவி பேசிய வீடியோ உரையாடலின் முழு விபரம்:
என்ன பேச்சு....
செருப்படி வாங்கிய சிக்கத்தர். சிஎஸ்.ஆர். காப்பியை தூக்கி நீட்டுற. நான் பாக்காத ஜி.எஸ்.ஆர்., காப்பியா... நான் பார்க்காத கோர்ட்டா... நான் ஏற்கனவே வார்னிங் கொடுத்தேன். நீ கேக்குற மாதிரி இல்ல. வீடியோவை டெலிட் பண்ணச் சொன்னேன்... ஆனா நீ கேட்கல. பெத்த அம்மாவாமே... ஏன் அங்கே ஒருத்தி... (எழுத முடியாது) ஆடுனாளே திருப்பூர்ல... அப்போ தெரியலையா பெத்த அம்மா...! உங்க அம்மா பத்தினி என்றால்... எங்க ஆத்த என்ன... (எழுத முடியாது) போயா பெத்தா. நான் சொன்னதை செஞ்சுட்டேன்... இதுக்கு மேல வர்றதை நான் பாத்துக்கிறேன். ஏன் வீட்ல இருந்து பேசுறேன். வீடே இல்லாமல் தெருவுல நின்னாலும் அவ அடங்கமாட்டா...புள்ளைங்க கொசுக்கடியில கிடக்குதாம்... உன் வாயால தான் நீ இப்படி இருக்க. உன் பாஸ்போர்ட், செல், சேனல் எல்லாம் போயிடுச்சு. இன்னும் திருந்தல. நீங்க எல்லாம் மோசமான கேடுகெட்ட நாய்கள்... உங்களையெல்லாம் உள்ளே தூக்கி போடனும். நீங்க முன்னாடி போங்க... நான் பின்னாடி வர்றேன். மானங்கெட்டவங்களா... நீயா என்னை செருப்பால அடிச்ச... நீ என் மேல் அடிச்சிருந்தா நீ அங்கேயே மவுத் ஆயிருப்ப. சிக்கந்தரு செத்துருவ... என் அண்ணன் வந்தான் பார்த்தியா. ஆம்பளையெல்லாம் தேவையில்ல உன்னை அடிக்க... நான் போதும்! நீ ஒரு ஒர்த்தே இல்லடா...நீ ஒரு டம்பி பீசு... சூர்யா ஒரு காமெடி பீசு. என்ன சொல்ற... சூர்யா தேவியை விடமாட்டேன் சும்மா... ஏய்...(கூந்தலை எடுத்து காட்டுகிறார்) என்னை (எழுத முடியாது) முடியாது. உனக்கு அவ்வளவு...(எழுத முடியாது) நாங்களும் வளர்த்து வெட்டி உட்கார்ந்திருக்கோம் சரியா. எல்லாத்தையும் பார்த்துட்டு வந்து உட்கார்த்திருக்கேன். நீங்க ரெண்டு பேரும் சரியான... (எழுத முடியாது) பிறந்திருந்தால்... ச்சை! யாராவது திருந்தனும்னு நெனச்சீங்கனா... இந்த ரெண்டு பேரை பார்த்து திருந்திக்கோங்க. இந்த யூடியூப்ல வர்ற காசு... த்தூ... ச்சீ...!இன்னைக்கு நான் சொல்றேன்... இனிமே என் வீட்டில் புளிக்குழம்பு, முட்டை குழம்பு எல்லாம் வரும். சமையல் வீடியோல இறங்கப்போறா சூர்யா . வரட்டும்... எந்த போலீஸ் வீடு ஏறி வர்றாங்கனு பார்ப்போம். (ஒரு ஐடி பெயரை குறிப்பிட்டு அவரிடம் உதவி கேட்கிறார்) அந்த (எழுத முடியாது) சிக்கா பேசுறதை எனக்கு அனுப்பி வைங்க. என் வாட்ஸ் ஆப் எண் உங்கட்ட ஏற்கனவே இருக்கு. வனிதா மேட்டர்ல நீங்க வாங்குனீங்க. அவன் பேசுறதை அனுப்புங்க எனக்கு. திருப்பூர்ல வந்து கை வெச்சுட்டு போனு அவ சொல்றா. வேணாம்... வேற மாதிரி ஆயிடும். செத்துப்போயிடுவ... வேற மாதிரி ஆயிடும். என்னடி ஆடிட்டு இருக்க... ஆமா நீங்க இரண்டு பேரும் யாரு... எங்கே இருந்து வந்த... போன வருசம் சேனல் குளோஸ் ஆனதும், சிங்கப்பூர்ல வந்து (எழுத முடியாது) இருந்த.
நீ திருந்த மாட்ட. நான் என் வீட்ல தான் இருக்கேன். என்னை தொட்டுப்பாரு. வீடில்லாத நாய்களா. சோஷியல் மீடியாவுல விபச்சாரம் பண்ற... (எழுத முடியாது). சிக்கா... என்னமோ மதுரைக்காரனாம்... சுப்பிரமணியபுரத்தில் யாராவது ஆம்பளைங்க இருந்தீங்கன்னா... இவனை ரோட்ல பார்த்தா விரட்டி விரட்டி அடிங்க. நான் கொடுத்ததையே அவன் மறக்க முடியாது. ஒரு ஆம்பள வெளக்கமார்... செருப்பால அடி வாங்குனா அதை மறக்கவே முடியாது. அடி வாங்கிட்டு 10 நிமிசத்துல வீடியோ போடுறான்... பேசனும் தான் வீடியோ போடுறேன். பார்த்துக்கலாம் யார் என்ன பண்றாங்கனு. எனக்கு ஆத்திரங்கள் வருது. (தண்ணீர் குடிக்கிறார்). என் செல்போன் என்னிடம் தான் உள்ளது. என் போனை யாரும் பிடுங்கவில்லை. உன்னை வெட்டல குத்தலயே...இன்னும் உயிரோடு தானே இருக்கே. இன்னும் உயிரோட இருக்கியே மானங்கெட்டவங்களா... சோத்த...(எழுத முடியவில்லை). இருடி வர்றேன்...!