தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 


 



 


45 நாட்களுக்கு இரவில் மட்டுமே படப்பிடிப்பு :


ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் சூர்யா 42 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் எண்ணூர் துறைமுகத்தில் மிகவும் பிரமாண்டமான செட் அமைக்கப்பட்டு நடத்தப்பட்டது; அதனைத்தொடர்ந்து  கோவாவில் படப்பிடிப்பு நடைபெற்றது; மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பின் அடுத்த ஷெட்யூல், கேரளாவில் விரைவில் துவங்கவுள்ளது. தொடர்ந்து 45 நாட்களுக்கு நடைபெற இருக்கும் இந்த படப்பிடிப்பு இரவில் மட்டுமே படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 


 







13 கேரக்டர்களில் சூர்யா :


உலகநாயகன் கமல்ஹாசன், நடிகர் விக்ரம் உள்ளிட்டவர்கள் தசாவதாரம், மைக்கேல் மதன காமராஜன், கோப்ரா உள்ளிட்ட படங்களில் பல கேரக்டர்களில் நடித்துள்ளனர். முதல் முறையாக அவர்களின் எண்ணிக்கையையும் மீறும் அளவிற்கு சூர்யா இப்படத்தில் 13 கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


1000 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதையை மையமாக வைத்து இப்படம் உருவாக்கப்படுவதால் இப்படத்தில் நடிகர் சூர்யா அரத்தர், வெண்காட்டார், முக்காட்டார், மண்டாங்கர், பெருமனத்தார் என ஐந்து கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. படத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு ஒரே நேரத்தில் தொடர்ந்து எடுக்க முடிவெடுத்துள்ளனர் படக்குழுவினர். 


 






 


மெகா பட்ஜட்டில் உருவாகிவரும் இப்படம் 10 மொழிகளில் 3டி படமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் ஹீரோயினாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்கிறார். மிகவும் மும்மரமாக நடைபெற்று வரும் இப்படப்பிடிப்பை ஏப்ரல் 2023ல் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.