தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மற்றும் தேசிய விருது பெற்ற நடிகர் சூர்யா, இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படத்திற்கு தற்காலிகமாக சூர்யா 42 என தலைப்பிடப்பட்டுள்ளது; இந்த திரைப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கிறார்; இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு 60 சதவீதம் முடிவடைந்த நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனவும் அறிவித்திருந்தனர். 


படப்பிடிப்புகள் மார்ச் மாதம் நிறைவடைந்து, திரைப்படம் விரைவில் வெளியாகும் என்றும் தகவல்கள் வெளியானது; இப்படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது. 






தற்போது வெளியான புதிய தகவல்களின்படி சூர்யா சிறுத்தை சிவா இணைந்துள்ள இந்த சூர்யா 42 திரைப்படத்தின் ஹிந்தி உரிமையை 100 கோடிக்கு தயாரிப்பாளர் ஜெயந்திலால் கடா கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது; அதுமட்டுமின்றி அந்த படத்தின் ஹிந்தி வெர்சனின் சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் தியேட்டர் விநியோக உரிமைகளையும் அவர் கைப்பற்றியுள்ளதாக  தகவல் வெளியாகி உள்ளது; இதுவரை  முன்னதாக எந்த தமிழ் திரைப்படமும் 100 கோடிக்கு விலை போனதில்லை. 


முன்னதாக, ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படம் 80 கோடிக்கு விலை போனது குறிப்பிடத்தக்கது; மேலும் இந்த சாதனை பிரபல கன்னட ப்ளாக்பஸ்டர் திரைப்படங்களாக பாகுபலி மற்றும் கேஜிஎப் திரைப்படங்களையும் முறியடித்துள்ளது. 






பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த வணங்கான் திரைப்படத்திலிருந்து சமீபத்தில் சூர்யா விலகியதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து அவர் விரைவில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக இருக்கும் 'வாடிவாசல்' திரைப்பட படப்பிடிப்பு தொடங்க உள்ளது.


மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்சில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் விக்ரம் திரைப்படத்தில் சூர்யா இணைந்து பெரும் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.


மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து தேசிய விருது பெற்ற திரைப்படம் சூரரைப் போற்று. இந்த திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படுகிறது.‌ அதில் அக்ஷய்குமார் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சூரரைப் போற்று திரைப்படத்தின் ஹிந்தி வெர்சனில் சூர்யா சிறப்பு தோற்றமும் கொடுக்கிறார்.