ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சர்வைவர் நிகழ்ச்சி பரபரப்பான கட்டத்தை எட்டி வருகிறது. 17 வது எபிசோடான நேற்று இந்த வாரத்திற்கான லீடர் தேர்வு நடந்தது. அதற்கான டாஸ்கில் காடர்கள் அணியில் உமாபதியும், வேடர்கள் அணியில் நந்தாவும் வெற்றி பெற்றனர். அவர்கள் வழிநடத்தும் அணிக்கு இன்று போட்டிக்கான டாஸ்க் வழங்கப்பட உள்ளது. இதற்கிடையில் மூன்றாம் உலகம் தீவில் உள்ள பார்வதியும் காயத்ரியும் தங்களை வெளியேற்றிய சக போட்டியாளர்களின் குறிப்பிட்ட சிலர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்த வாரம் யார் வெளியேற்றப்படுவார்கள், வந்தால் அவர்களை எப்படி எதிர்கொள்வது என்றெல்லாம் முன்பே திட்டமிட்டு வருகின்றனர். இந்த பரபரப்பான சூழலில் இன்று 18 வது எபிசோட் தொடங்குகிறது. 






 


கம்பு சுத்தும் அம்ஜத்... கண்டுபிடித்த நந்தா!




காடர்கள் தீவில் காலைப்பொழுதை உணவு தயாரிப்பதில் தொடங்கினர். உமாபதி டான்ஸ் ஆடியதில் ஸ்டார் பெர்பாமன்ஸ் பெற்றதற்கான கொடுக்கப்பட்ட டெண்ட் மூலம், அணியினர் நிம்மதியான உறக்கம் கொண்டனர். வேடர்கள் அணியில் அதே போல் டாஸ்க் செல்ல தயாராகினர். அம்ஜத் தன்னிடம் யாரை எலிமினேட் செய்யலாம் என்று கேட்டதாகவும், நாம் இன்றைய டாஸ்கில் ஜெயிக்க வேண்டும் என்கிற எண்ணத்தை மட்டும் மைண்டில் வைக்குமாறு கூறியதாக லெட்சுமி மற்றும் ரவியிடம் நந்தா கூறினார். அதை அணியினர் கூடும் போதே, நேருக்கு நேராக அம்ஜத்திடம் நந்தா தெரிவித்தார். நெகட்டிவ் எண்ணம் நமக்கு வேண்டாம் என்று. ஒற்றுமையுடன் செயல்படலாம் என அறிவுரை வழங்கினார். காடர்கள் அணியில் ராம் சிகிச்சைக்காக சென்றதால், அவர்கள் அணியில் ஒருவர் எண்ணிக்கை குறைந்தது. அதே போல லேடிகேஷ் உடம்பிலும் சில பிரச்சனைகள். அவரையும் சிகிச்சைக்கு வருமாறு டாக்டர்கள் அழைத்தனர். ஆள் குறையும் என்பதால் அவரும் அதை பொறுத்து, போட்டியில் கலந்து கொண்டார். 


கடுமையான டாஸ்க்... மோதிய அணிகள்!




இரு அணியினரும் வெற்றியை நோக்கி டாஸ்க் நடைபெறும் இடத்திற்கு வந்தனர். அங்கு ராம் இல்லை என்று காடர்கள் அணி கூறிக்கொண்டிருக்கும் போதே அவரை அங்கு வரவழைத்து ஷாக் கொடுத்தார் அர்ஜூன். அதன் பின் ரிவார்டு சேலஞ்ச் குறித்து அர்ஜூன் விவரித்தார். இந்த போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு விருப்பமான கிப்ட் கிடைக்கும் என்றார். வெட்டப்பட்ட தென்னை மரங்களை லாக் செய்து, பாதையை கடந்து, மரத்தில் ஏறி, இறுதியில் பஜில் சேர்க்க வேண்டும். கொஞ்சம் கடுமையான போட்டி தான். வேடர்கள் துவக்கத்தில் சிறப்பாக மரங்களை அடுக்கத் தொடங்கினர்.




ஒவ்வொரு மரமும் 100 கிலோவுக்கு அதிகமான எடையில் இருந்தது. வேடர்களின் ஒரு கட்டை கிழே விழுந்த சமயத்தில், பின்தங்கியிருந்த காடர்கள் கொஞ்சம் முன்னேறினர். இதனால் அந்த போட்டியில் சில நொடிகள் காடர்கள் அணி முன்னேறியது. அதன் பின் அடுத்தடுத்த தொடர் டாஸ்க் தொடங்கியது. 


மீண்டும் தோற்ற வேடர்கள்!


கயிறு கழற்றிவிட்டு, ஆணி அடித்து  பெட்டியை வெளியே எடுக்கும் டாஸ்க். காடர்கள் விரைந்து டாஸ்க்கை தொடங்கினர். அவர்கள் மூன்றாவது கட்டத்தை விரைந்து நிறைவு செய்து, அடுத்த கட்டத்திற்கு நகர்ந்தனர். ஆனால் வேடர்கள் அணி இந்த முறை அதில் தவறவிட்டனர். இருந்தாலும் தாமதமாக பின்தொடர்ந்தனர். லீடு எடுத்து கடைசி டாஸ்க் ஆன பஜில் பொருத்தும் பணியில் விஜயலட்சுமி-லேடிகேஷ் இறங்கினர். வேடர்கள் அணி தாமதமாகவே டாஸ்க் பகுதிக்கு வந்து இறுதி டாஸ்கை தொடங்கினர். வேடர்கள் அணியில் நாராயணன் மற்றும் லெட்சுமி ப்ரியா ஆகியோர் பஜில் அடுக்கும் பணியை மேற்கொண்டனர். தாமதமாக தொடங்கினாலும் வேடர்கள் அணி கொஞ்சம் புத்திசாலித்தனமாக பஜில் கேமை நகர்த்தினர். வேடர்கள் வெற்றி பெறுவார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், இறுதியில் விஜயலட்சுமியின் வேகம் காரணமாகவும், ஐஸ்வர்யா சுட்டிக்காட்டிய தவறை தவறவிட்டதாலும் வேடர்கள் அணி தோல்வியடைந்தது. 


சர்வைவர் ஷாப்... சர்வைவர் நாணயம் பரிசு!






வெற்றி பெற்ற அணிக்கு எண்ணெய், முட்டை, சிக்கன், பழங்கள், பயறுகள் என சத்தான, சுவையான உணவு சமைப்பதற்கான அனைத்து பொருட்களும் அங்கு இருந்தது. இதற்கிடையில் திடீரென லட்சுமி ப்ரியா ஒரு ஓலையை அர்ஜூனிடம் கொடுத்தார்.  முன்பு செய்த டாஸ்கின் போது எதிர் அணியின் பரிசை பங்கு எடுத்துக் கொள்ளலாம் என அவருக்கு ஒரு சலுகை தரப்பட்டது. அந்த சலுகை கடிதம். அதன் படி காடர்கள் பரிசாக பெற்ற ஒரு பொருளாக முட்டைகளை அவர் தனது அணிக்காக எடுத்துக் கொண்டார்.




பின்னர் வெற்றி பெற்ற காடர்கள் அணிக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டது. காடர்கள் அணியில் சர்வைவர் ஷாப் இருக்கும், சர்வைவர் நாணயம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. அதன் மூலம் அவர்கள் பொருட்கள் வாங்கலாம். 


காடர்கள் அணிக்குச் சென்ற நந்தா!




இதற்கிடையில் தோல்வியடைந்த வேடர்கள் அணியிலிருந்து ஒருவரை சிறப்பு அழைப்பாளராக ஒருவரை அழைத்து தற்காலிகமாக வைத்து சலுகைகளை தரலாம் என்று அர்ஜூன் அறிவித்தார். காடர்கள் அணியினர் வேடர் அணியின் தலைவர் நந்தாவை அழைத்தனர். அவர் அவர்களுடன் காடர்கள் அணிக்கு சென்றார். அந்த தீவு தனது வேடர்கள் தீவை விட மோசமாக இருந்தது. அதை கண்டு நந்தா அதிர்ச்சியடைந்தார்.




பின்னர் அவர்களுக்கு டெண்ட் அமைப்பதற்கு ஐடியா கொடுத்து அதற்கான பணியை செய்தார். இதற்கிடையில் காடர்கள் அணியில் அறிவித்தபடி ஷாப் திறக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட 30 நாணயங்களை கொண்டு அங்கிந்த கடையில், அவர்களுக்குத் தேவையான பொருட்களை காடர்கள் அணியினர் வாங்கினர். விருந்தாளி நந்தாவுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அந்த அணியினரிடம் உரையாடிய நந்தா, அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினையான நபர் யார் என்பதை அறிய முயற்சித்தார். அவர்கள் ராம் மீது ஒருவித வெறுப்பு இருப்பதை நந்தா உணர்ந்து கொண்டார். இறுதியில் சுவையான சிக்கன் உணவை அந்த அணியினரோடு நந்தா பகிர்ந்து கொண்டார். இவ்வாறாக இன்றைய எபிசோட் முடிகிறது. நாளை...?