ஜீ தமிழ் சேனலின் சர்வைவர் நிகழ்ச்சியில் இன்று 11வது எபிசோட். நேற்றைய நாளில் காடர் மற்றும் வேடர் அணிக்கான இந்த லீடர் யார் என்பது குறித்த டாஸ்க் நடைபெற்றது. அதில் காடர் அணியில் விஜயலட்சுமியும், வேடர் அணியில் அம்ஜத் கானும் வெற்றி பெற்றனர். காடர் அணி எதிர்பார்த்தபடி விஜயலட்சுமி தேர்வு ஆனாலும், வேடர் அணியில் பெசன்ட் ரவியை லீடராக தேர்வு செய்ய நினைத்தனர். ஆனால், அவர் டாஸ்கில் தோல்வி அடைந்ததால், அவரை வெற்றி பெற்ற அம்ஜத் லீடராக தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் அம்ஜத் வெற்றியை வேடர் அணி ஏற்றுக் கொண்டது. இருப்பினும் அந்த அணியின் ஆர்ஜே பார்வதி, தனக்கு தங்கள் அணியினர் வாக்களிக்கவில்லை என்றும், வேண்டுமென்றே தன்னை ஒதுக்குவதாகவும், இனி ஒதுங்கி இருக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
இது ஒருபுறமிருக்க, புதிய லீடர் தேர்வான நிலையில், இரவில் தீவில் ஆலோசித்த வேடர் அணியினர், தங்களின் தோல்வியிலிருந்து மீண்டு வருவது குறித்து ஆலோசிக்காமல், வேடர் அணியினரின் ஒற்றுமை குறித்து கமெண்ட் செய்தனர். குறிப்பாக விக்ராந்த், உமாபதி, சரண், விஜயலட்சுமி ஆகியோர் வேடர் அணியை சேர்ந்த ஐஸ்வர்யா, பார்வதி உள்ளிட்டோரை தனித்தனியே விமர்சித்தனர். இது சர்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இன்று பரபரப்பாக 11வது எபிசோட் தொடங்கியது.
இறங்கி செய்வோம்...-விஜயலட்சுமி!
இப்போது கார்டர் அணியில் ஆண் போட்டியாளர்கள் வேடர் அணியை இந்த முறை தோற்கடிக்க வேண்டும் என்று திட்டம் தீட்டினர். இந்த முறைவிட்டால் அவர்கள் நம்பிக்கை அதிகரித்து விடும் என அனைவரும் கருத்து தெரிவித்தனர். இந்நிலையில் போட்டிக்கு தயாராகும் முன் இரு அணியினரும் தீவில் கடுமையான உடற்பயிற்சி மேற்கொண்டனர். அது கொஞ்சம் ஓவர் தான் என்றாலும், லாஜிக் படி அதை ஏற்க வேண்டியது தான். 20 நிமிடம் இறங்கி செய்வோம்... என தனது அணிக்கு விஜயலட்சுமி ஊக்கம் கொடுத்தார். நம்ம உடல் என்ன வேண்டுமானாலும் செய்யும்... மனதை மட்டும் திடமா வைத்துக்கோங்க என்றும் வெறித்தனமான அறிவுரைகளை வழங்கினார்.
உணவு தான் இந்த வாரம் சலுகை!
பின்னர் டாஸ்க் நடக்கும் இடத்திற்கு இரு அணிகளும் வழக்கமான பில்டப்புடன் வந்து சேர்ந்தனர். அவர்களை அர்ஜூன் வரவேற்றார். இரு புதிய லீடர்கள் வந்ததால், இரு அணியும் எனர்ஜியாக இருப்பதாக அர்ஜூன் தெரிவித்தார். ‛பழைய லீடர் செய்த தவறுகள் மறக்கப்பட்டது... இன்று தான் முதல் நாளாக போட்டியிடப்போகிறோம்...’ என்று உமாபதி தெரிவித்தார். ‛இன்னும் மூவர் அணி உள்ளதா...’ என உமாபதியிடம் அர்ஜூன் கேட்டார். ‛இல்லை சார்... ஆறு பேர் அணி...’ என விஜயலட்சுமி முந்திக் கொண்டு கூறினார். அப்படியே வேடர் பக்கம் திரும்பிய அர்ஜூன், அவர்களின் கருத்துக்களை கேட்டார். பின்னர் டயட் எப்படி இருக்கிறது என்று அந்த கருத்துக்களை கேட்டார். அதற்கு காரணம் இருந்தது. போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு உணவு தொடர்பான சலுகை கிடைக்கும் என அர்ஜூன் அறிவித்தார். அடுத்தது டாஸ்க் ஆரம்பித்தது.
பார்வதியால் பின்னடைவு!
ராணுவத்திற்கு ஆள் எடுப்பது போன்று, நிஞ்சா ஸ்டைலில் ஒரு டாஸ்க் ரெடியாக இருந்தது. கார்டர் அணியில் 6 பேர் மட்டுமே இருந்ததால், பேலன்ஸ் அடிப்படையில் ஒருவரை வேடர் அணி ஒதுங்கியிருக்க பரிந்துரைக்க வேண்டும் என்று அர்ஜூன் கூறினார். உடல் எடையை காரணம் காட்டி, டாஸ்கில் ரவி தானாக ஒதுங்கி இருப்பதாக முடிவு செய்தார். வழக்கம் போல இந்த முறையும் காடர் அணி லீடு எடுத்து டாஸ்க் செய்தனர். வேடர் அணி கொஞ்சம் தடுமாறியது. எடுக்கப்பட்ட முடிவுக்கு மாறாக ஐஸ்வர்யா செயல்பட்டதாக பார்வதி குற்றம்சாட்டினார். விறுவிறுப்பாக அந்த டாஸ்க் நகர்ந்தது. தடுமாறி வேடர் அணிக்கு அஜ்மல் ஒரு டிப் கொடுக்க அதை பின்பற்றி அனைவரும் டாஸ்கின் ஒரு பகுதியை கடந்தனர். அனைவரும் கடந்தும் பார்வதி அந்த டாஸ்கை கடக்கவில்லை. அது வேடர் அணிக்கு பின்னடைவானது.
மீண்டும் கெத்து காட்டிய வேடர்கள்!
ஒரு வழியாக இரு அணியும் டாஸ்கின் இறுதி கட்டத்தை எட்டினர். இப்போது ஒரு பெரிய பொட்டிகளை ஒன்றாக இணைக்கும் பஜில் கேம் தொடங்கியது. உடல் வலுவை பொருத்து தான் அதில் வெற்றி பெற முடியும் என்பதால் இரு அணியும் கடுமையாக போராடினர். இந்த டாஸ்கில் ரவி இல்லாதது வேடர் அணிக்க பின்னடைவாக இருந்தது. நல்ல வலுவான ஆண்கள் அங்கு இல்லை. இருந்தாலும் காடர்கள் அணியை விட வேடர்கள் அணி முடிந்தவரை வேகம் காட்டியது. போராடியது. காடர்கள் கொஞ்சம் குழம்பினர்.
அந்த இடத்தில் பின்திங்கிய வேடர்கள் அணி சிறப்பாக செயல்பட்டு வழக்கம் போல மூன்றாவது டாஸ்கிலும் வேடர்கள் வெற்றி பெற்றனர். வழக்கம் போல முதலில் சிறப்பாக தொடங்கி, இறுதியில் காடர் அணி தோற்றது. அவர்களுக்கு கிப்ட் வழங்கப்பட்டது.
வேடர்கள் அணிக்கு பரிசுக்கு மேல் பரிசு!
பின்னர் வெற்றி குறித்து வேடர்கள் அணியிடம் அர்ஜூன் கேட்டார். அப்போது கருத்து சொன்ன லெட்சுமி ப்ரியா, எதிரணியின் தவறுகளை பட்டியலிட்டார். தோல்விக்கு விஜயலட்சுமி முழு பொறுப்பேற்றார். பின்னர் வெற்றி பெற்ற வேடர்கள் அணிக்கு ஸ்பைசஸ் கிப்ட் சமையலுக்கு வழங்கப்பட்டது.
அத்தோடு ட்ரைப் லீடர் அம்ஜத்திற்கு ஒரு கிப்ட் வழங்கப்பட்டது. ஒரு பெரிய குடுவையில் ஜூஸ் கொடுத்தார். அதை கொடுத்த யாராவது ஒருவரிடம் பகிர்ந்து கொள்ளலாம், அங்கேயே அதை குடிக்க வேண்டும் என அர்ஜூன் தெரிவித்தார். அதை லெட்சுமி ப்ரியா உடன் அம்ஜத் பகிர்ந்து கொண்டார். அனைவர் முன்னிலையில்அவர்கள் இருவரும் அந்த சுவையான ஜூஸ் பருகினர். பின்னர் வேடர்கள் அணியை வாழ்த்திய அர்ஜூன், அவர்களை தீவுக்கு அனுப்பி வைத்தார்.