கமல்ஹாசன் நடிப்பில் வரும் ஜூன் மாதம் 3-ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘விக்ரம்’. மாநகரம், கைதி, மாஸ்டர் உள்ளிட்ட படங்களை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகியிருக்கும் இந்தப்படத்தின் டீஸர், மேக்கிங் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


விக்ரம் படத்தை தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் உடன் இணைந்து மீண்டும் படம் இயக்க இருக்கிறார். விக்ரம் படத்திற்கு பிறகு இந்த படம் குறித்த அப்டேட் வெளியாகும் என்று தனியார் விருது விழாவில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்தார். இதைக்கேட்ட விஜய் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் #Thalapathy67 என்ற ஹாஸ்டேக்கை ட்ரெண்ட் செய்து வந்தனர்.


இந்தநிலையில், தளபதி 67 திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் விக்ரம் பார்ட் 3 திரைப்படத்தை இயக்க இருப்பதாகவும், அந்த படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக கதாநாயகனாக நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. 








 

விரைவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் 2 திரைப்படம் வெளியாக இருக்கிறது. அந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூர்யா நடித்தது நாம் அறிந்ததே. இந்த படத்தில் சூர்யா நடித்த அதே கதாபாத்திரத்தை கொண்டு விக்ரம் 3 திரைப்படத்தை எடுக்க திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து தற்போது விக்ரம் 3 பெயரில் நடிகர் சூர்யா முகத்தை துப்பாக்கி மற்றும் தோட்டாக்களால் உருவாகி அவரது ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.