ஜெய்பீம்..


Amazon Prime ஓடிடி தளத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய திரைப்படம் ‘ஜெய் பீம்.  சமூக வலைத்தளங்களில் ‘டாக் ஆஃப் தி டவுனாக’ மாறிய ஜெய்பீம் ரசிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. படத்தில் சூர்யா அத்தனை எதார்த்தமாக , படத்தின் தேவை மற்றும் அதில் தனக்கான கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து நடித்தார் சூர்யா. ஒவ்வொரு சீனிலும் சூர்யா பேசும் அழுத்தமான வசனங்கள் பார்ப்பவருக்கும் மெய் சிலிர்ப்பை உண்டாக்கும். ஒரு பக்கம் பாராட்டு குவிந்ததாலும் விமர்சனத்துக்கும் பஞ்சம் இல்லாமல் சர்ச்சையில் சிக்கியது படம்


ஓடிடியில் வெளியானாலும் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்ற ஜெய்பீம் ஆஸ்கர் ரேஸிலும் ஓடியது. 






இயக்குநர் ஞானவேல்


2022ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விழாவுக்கான படங்களில் தேர்வில் தொடக்க பட்டியலில் ஜெய்பீம் இடம்பெற்றது. நம்ம ஊர் திரைப்படம் ஆஸ்கரை அடிக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், 10 பிரிவுகளின் கீழ்  படங்கள் பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இறுதிப்பட்டியலுக்கான பரிந்துரை பட்டியலில் ஜெய்பீம் படம் இடம்பெறவில்லை. 


முதல்வர் ஸ்டாலினும் படத்தை நேரில் கண்டுகளித்து பாராட்டுகளை தெரிவித்திருந்தார். வெறும் சினிமா ரசிகர்கள் என்பதையும் தாண்டி அனைத்து தரப்பினரையும் சென்று சேர்ந்தது ஜெய்பீம். வட மாநிலத்தில் ஒரு கிராமத்தில் திரைகட்டி ஜெய்பீம் ஒளிபரப்பானதும், அதனை ஒரு ஊரே அமர்ந்து பார்த்ததும் கூஸ்பம்ப் மொமண்டாக இருந்தது. தன்னுடைய முதல் படத்திலேயே இத்தனைபெரிய வெற்றியை தனக்காதாக்கினார் இயக்குநர் ஞானவேல். ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கி இருந்தார். 






அதே கூட்டணி மீண்டும்..


சூர்யா -ஞானவேல் கூட்டணி மிகக்கச்சிதமாகவே பொருந்திப்போனது. இந்நிலையில் அதே கூட்டணி மீண்டும் ஒரு படத்தில் கைகோக்கவுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டியில் இருந்து நம்பத்தகுந்த வட்டாரம் இந்த தகவலை உறுதி செய்துள்ளது. அதன்படி சூர்யாவின் தற்போதைய படங்களின் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கும் நிலையில் விரைவில் ஞானவேலுடன் சூர்யா இணையவுள்ளதாகவும், அது தொடர்பான அறிவிப்பு கூடிய விரைவில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது. தற்போது சூர்யா பாலா இயக்கத்திலும், வெற்றிமாறன் இயக்கத்திலும் நடித்து வருகிறார். 


முதல் படத்திலேயே வெற்றியை ருசித்த கூட்டணி என்பதால் ஞானவேல் - சூர்யா கூட்டணிக்கு ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.