25 Years Of Suriya : சரவணன் முதல் ரோலக்ஸ் வரை... இது சூர்யாவின் 25 ஆண்டு பயணம்!

இவ்வளவு ஆண்டுகளாக, மறக்க முடியாத பல ப்ளாக் பஸ்டர் படங்களை, அவரது ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்தார். நடிகர் சூர்யாவின் நடிப்புக்கும் அழகான சிரிப்புக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.

Continues below advertisement

இந்திய சினிமாவின் திறமை வாய்ந்த்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. இன்றுடன் இவர் கடந்த 25 வருட சினிமா வாழ்க்கையை கொண்டாடும் வகையில், அவரது ட்விட்டரில் புதிய பதிவை ஷேர் செய்துள்ளார்.

Continues below advertisement

1997 ஆம் ஆண்டு நேருக்கு நேர் படத்தில் அறிமுகமாகிய சூர்யா இதுவரை 50 படங்களில் நடித்துள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவென்றால்,நேருக்கு நேர் திரைப்படத்தில் முதலில் நடித்தது அஜித்-விஜய் தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போதே, அதிலிருந்து விலகினார் அஜித்.அது தொடர்பாக பேட்டி ஒன்றில் கூறிய நடிகர் தாமு, ‛அஜித் படப்பிடிப்பில் இருந்து திடீரென விலகினார். அதற்கு காரணம் ‛டேட்டா... ரேட்டா’ என்பது தனக்கு தெரியவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த காரணத்தால்தான் சூர்யா நேருக்கு நேர் படத்தில் அறிமுகமானார்.

தற்போது ஜெய்பீம் நாயகன் சூர்யா உருக்கமான  பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவரது சினிமா பயணத்தை அழகானது என்றும் ஆசிர்வதிக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அதுபோக கனவு காணுங்கள், நம்பிக்கை வையுங்கள்- உங்களது சூர்யா என்றும் குறிப்பிட்டிருந்தார். இவ்வளவு ஆண்டுகளாக, மறக்க முடியாத பல ப்ளாக் பஸ்டர் படங்களை, அவரது ரசிகர்களுக்கு பரிசாக கொடுத்தார். நடிகர் சூர்யாவின் நடிப்புக்கும் அழகான சிரிப்புக்கும் உலகம் முழுவதும் ரசிகர்கள் உண்டு.


நடிகர் சூர்யாவின் ட்வீட் : 

சூர்யா, நடிகர் சிவகுமாரின் மகன் என்பதால் சினிமா வாழ்க்கை எளிதாக அமையவில்லை. தனது தந்தைக்கு அவப் பெயரை சேர்க்கக்கூடாது என்பதில் சூர்யா தெளிவாக இருந்தார். கடின உழைப்பும் விடா முயற்சியும் அவரின் திறமையை மேலும் மெருகு ஊட்டியது. 1997-ல் மணி ரத்தினத்தின் தயாரிப்பில் அறிமுகமாகிய நாளிலிருந்து சிறந்த நடிப்பினை வெளிப்படுத்தி வருகிறார்.

காதலனாக இருந்தாலும் சரி ராணுவ வீரராக இருந்தாலும் சரி, அவரின் தனிப்பட்ட திறமையால் அனைவரும் கவர்ந்து  விடுவார் சூர்யா. நடிகர் சூர்யா எக்கசக்கமான விருதுகளை குவித்துள்ளார். இதுவரை இரண்டு தேசிய விருதுகள், நான்கு ஃபிலிம் ஃபேர் விருதுகள், மூன்று மாநில விருதுகள் என பல விருதுகளை சூர்யா பெற்றுள்ளார்.

அதுபோக, இவர் நடித்த ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்று ஆகிய இரண்டு படங்களும் ஆஸ்கர் விருதுக்கு தேர்வானது. ஆனால் அவை இரண்டும் இறுதி கட்டம் வரை செல்லவில்லை. ஆஸ்கர் அமைப்பிடம் இருந்து அழைப்பினை பெற்ற பெருமை மிக்க நடிகராக சூர்யா திகழ்கிறார்.இப்போது பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து வருகிறார்.வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் நடிக்கவுள்ளார். இதுமட்டுமல்லாமல், சிறுத்தை சிவாவின் இயக்கத்திலும் சூர்யா நடிக்கவிருக்கிறார். ஆக, சூர்யாவின் காட்டில் மழைதான்!!

 

Continues below advertisement
Sponsored Links by Taboola