தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யாவின் நடிப்பில் சுதா கொங்ரா இயக்கத்தில் வெளியான படம் ’சூரரைப் போற்று ‘. இந்த படம் இந்தியாவில் எளியோரும் பயணம் செய்யும் வகையில் பட்ஜெட் விமான சேவையை அறிமுகப்படுத்திய  ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியா அபர்ணா பாலமுரளி நடித்திருந்தார்.  ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருந்தார். பிரபல ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. பல பிரபலங்களும் படத்தை வெகுவாக பாராட்டினர்.  சூர்யாவும் ஒரு தனிமனிதன் பலருக்கான கனவுகளை சுமந்துக்கொண்டு எப்படி சிரமப்படுகிறார் என்பதை அப்படியே திறையில் நடித்து காட்டியிருந்தார். அவருக்கு ஈடாக அபர்ணா பாலமுரளியும் கலக்கியிருந்தார். இந்த நிலையில் படத்தை ஹிந்தியில் ரிமேக் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்த விவரங்களை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளார்.






சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் அபண்டன்ஷியா என்டர்டெய்ன்மென்ட்(Abundantia Entertainment) நிறுவனங்கள் இணைந்து சூரரைப்போற்று இந்தி பதிப்பை தயாரிக்க உள்ளனர். தமிழில் இந்தப்படத்தை இயக்கிய சுதா கொங்கரோவே இந்தியிலும் இயக்க உள்ளார் என்பது கூடுதல் சிறப்பு. படத்தில் சூர்யா கதாபாத்திரத்தில் எந்த பாலிவுட் நடிகரை நடிக்க வைக்க உள்ளனர் என்பது குறித்த அறிவிப்பு  விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களையும் படக்குழு விரைவில் வெளியிடுவார்கள்.




 


சூர்யா நடித்த படங்களில்  சூரரைப்போன்று படம் முக்கியமானது. இந்த படத்தை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படத்திற்காக படக்குழுவினர் கொட்டிய கடின உழைப்பிற்கு பெருமை சேர்க்கும் வகையில் ‘சூரரைப் போற்று’ படம் ஆஸ்கர் போட்டியில் களமிறங்கியது.பொதுவாக தியேட்டரில் வெளியாகும் படங்களை மட்டுமே ஆஸ்கார் போட்டியில்  சேர்த்துக்கொள்வது வழக்கம். ஆனால் கொரோனா சூழல் காரணமாக தியேட்டர்கள் செயல்பட உலகம் முழுக்க அனுமதி மறுக்கப்பட்டிருந்ததால். ஒடிடியில் நிறைய படங்கள் வெளியாகின. எனவே ஆஸ்கார் விருதிற்கு ஒடிடியில் வெளியான படங்களும் கருத்தில் கொள்ளப்பட்டன. அதன் அடிப்படையிலேயே ’சூரரைப்போற்று ‘ படமும் பரிந்துரைக்கப்பட்டது. அந்த வரிசையில் பொதுப்பிரிவில் 'சூரரைப் போற்று' திரைப்படம் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த கதாசிரியர் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும் போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.