நடிகர் சூர்யா நடிப்பில் சமீபத்தில் வெளியான வெப்சிரீஸ், கிட்டார் கம்பி மேலே நின்று. நவரசா என தலைப்பு வைக்கப்பட்டு இருந்த இந்த வெப் சிரீஸின் உள்ள அடங்கும் இதனை இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கி இருந்தார். இந்த வெப் தொடர் ரசிகர்களி மத்தியில் கலைவயான விமர்சனங்களை பெற்றது.


இதனையடுத்து நடிகர் சூர்யா தற்போது இயக்குநர் பாண்டிராஜ் இயக்கி வந்த எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். வழக்கமாக பாண்டி ராஜன் கதை என்றாலே அதில் கிராமத்து வாசம் வீசும். அதே போல் தான் இந்த படமும் கிராமத்தில் பின்னணி மையாமாக கொண்ட உருவாகி இருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 


இதில் ப்ரியங்கா மோகன் நாயகியாக நடித்து உள்ளார். சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், இளவரசு, தேவதர்ஷினி, சுப்பு பஞ்சு,  சூரி உள்ளிட்டோர் இந்த படத்தில்  நடித்து உள்ளனர். 


இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, காரைக்குடி ஆகிய பகுதியில் நடைபெற்று வந்தது. இதனையடுத்து சமீப காலமாக இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற்று வந்தது. 


இந்நிலையில் பொள்ளாச்சியில் நேற்றுடன் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் படத்தில் இருக்கும் இரண்டு பாடல்கள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அது மட்டுமின்றி அந்த இரண்டு பாடல்களை சென்னை மற்றும் கோவாவில் ஷூட் செய்ய படத்தின் இயக்குநர் பாண்டிராஜ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. 






ஏன் இந்த திடீர் முடிவு? எதனால் படத்தின் படப்பிடிப்பை இவ்வளவு சீக்கிரமாக நடத்தப்பட்டது என்று கேள்வி ரசிகர்கள் மனதில் எழலாம். அதாவதது, படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்திற்குள் முடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம், இயக்குநர் பாண்டிராஜிடம் கேட்டுக் கொண்டதால் தான் விரைவாக முடிக்கப்பட்டதாம். 


மேலும் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் அமைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. 


படத்தின் முதல் லுக் வீடியோ கடந்த ஜூலை மாதம் 22 ஆம் தேதி வெளியானது. இதனைத் தொடர்ந்து படத்தின் அடுத்த போஸ்டர் நடிகர் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 23 ஆம் தேதி வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலானது. விரைவில் இதனை படக்குழுவினர் அதிகாரப்பூர்வாமாக  அறிவித்து உள்ளனர்.