தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூர்யா. கங்குவா படத்திற்குப் பிறகு சூர்யா பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் ரெட்ரோ படத்தின் தேதி உறுதியானது.
ரெட்ரோ அவதாரத்தில் சூர்யா:
மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியான கங்குவா படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறாத நிலையில், சூர்யாவிற்கு பெரும் அடியாக விழுந்தது. சூர்யாவிற்கு ஓடிடியில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில் திரையரங்கில் ரிலீசான படங்கள் வெற்றி பெற்று நீண்ட வருடங்கள் ஆகிவிட்டது.
இந்த நிலையில் தான் கடந்த கிறிஸ்துமஸ் தினத்தன்று கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த ரெட்ரோ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. காதல் மற்றும் ஆக்ஷன் கலந்த திரைப்படமாக ரெட்ரோ இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: Coolie Release Date : ஜெயிலர் தேதியில் கூலி? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்
லாக்கான ரிலீஸ் தேதி:
இந்த நிலையில் ரெட்ரோ படம் எப்போது வெளியாகும் சூர்யா ரசிகர்கள் காத்திருந்தனர். அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பு வெளியான நிலையில், ரெட்ரோ படமும் அதே தேதியில் வெளியாகலாம் என்ற தகவல் இருந்து வந்தது. இந்த நிலையில் தான் ரெட்ரோ திரைப்படம் நடிகர் அஜித்தின் பிறந்த நாள் மற்றும் உழைபாளர் தினமான மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பை படத்தின் இயக்குனரான கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ரெட்ரொ படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜூ ஜார்ஜ், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.